அமெரிக்க டி20 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் திடீரென வெளியேறிய ராயுடு – ரசிகர்கள் கோபம், காரணம் என்ன?

Rayudu
- Advertisement -

ஹைதராபாத்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் அம்பாத்தி ராயுடு 2013இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் சுமாராக செயல்பட்ட போதிலும் 2018இல் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஓரளவு நிரந்தரமான இடத்தைப் பிடித்தார். அதில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு காத்திருந்த அவரை கடைசி நேரத்தில் முப்பரிமாண வீரர் தேவை என்ற கண்ணோட்டத்துடன் கழற்றி விட்ட எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு அதற்காக மனமுடைந்து போட்ட 3டி ட்விட்டை வன்மமாக எடுத்துக் கொண்டு மேற்கொண்டு வாய்ப்பு கொடுக்காமல் அலைக்கழித்தது.

Rayudu 1

- Advertisement -

அதனால் 34 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ராயுடு ஐபிஎல் தொடரிலும் தடுமாற்றமாகவே செயல்பட்டு வந்த நிலையில் இந்த வருட ஃபைனலில் முக்கியமான இன்னிங்ஸ் விளையாடி சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். மேலும் சர்வதேச கேரியர் வன்மத்தால் வீழ்த்தப்பட்டாலும் ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை (6) வென்ற வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த ஜாம்பவானாக விடைபெற்ற அவரது கையில் கோப்பையை கொடுத்து கேப்டன் தோனி கௌரவப்படுத்தினார்.

காரணம் என்ன:
அந்த நிலையில் ஓய்வுக்கு பின் அமெரிக்காவில் புதிதாக இந்த வருடம் துவங்கப்பட்டுள்ள மேஜர் லீக் டி20 தொடரில் சென்னை அணியின் கிளையான டெக்ஸாழ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ராயுடு ஒப்பந்தமானார். தென்னாப்பிரிக்க வீரர் டு பிளேஸிஸ் தலைமையில் டேவோன் கான்வே, ப்ராவோ, மிட்சேல் சாட்னர் போன்ற சென்னை அணிக்காக விளையாடிய வீரர்களும் டேவிட் மில்லர் போன்ற இதர சில வெளிநாட்டு வீரர்களும் அந்த அணியில் விளையாட ஒப்பந்தமானதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வரும் ஜூலை 17ஆம் தேதி துவங்கும் அத்தொடரிலிருந்து கடைசி நேரத்தில் சொந்த காரணங்களுக்காக விலகுவதாக ராயுடு அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

rayudu 2

அப்படி சொந்த காரணம் என்று அவர் சொன்னாலும் இதற்கான பின்னணியில் பிசிசிஐ இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு பெறாத சுரேஷ் ரெய்னா, ராபின் ஊத்தப்பா போன்றவர்கள் ஐபிஎல் தொடரிலும் மவுசு குறைந்துள்ளதால் சமீப காலங்களில் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு முதலில் சர்வதேசம் மற்றும் ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் ஓய்வு பெற வேண்டும் என்ற விதிமுறையை பிசிசிஐ கடைப்பிடித்து வருகிறது.

- Advertisement -

அதனால் எப்படியும் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை என்று கருதும் அவர்கள் 40 வயது போன்ற எதிர்பார்க்கப்படும் சமயத்திற்கு முன்பாகவே ஓய்வு பெற்று வெளிநாடுகளில் விளையாட துவங்கியுள்ளனர். ஆனால் அதை விரும்பாத பிசிசிஐ இனிமேல் ஓய்வு பெறும் வீரர்கள் குறிப்பிட்ட சில காலம் முடியும் வரை வெளிநாடுகளில் விளையாட முடியாது என்ற புதிய விதிமுறையை கொண்டு வருவதற்கு கடந்த மாதம் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுத்ததாக செய்திகள் வெளியானது.

Jay-Shah

குறிப்பாக ஓய்வு பெறுவது மட்டுமின்றி தங்களிடம் “ஆட்சேபனை இல்லை” என்ற சான்றிதழ் பெற்ற பின்பே இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் விளையாட முடியும் என்ற நிலைமையை பிசிசிஐ கொண்டு வர உள்ளது. அந்த விதிமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளதால் இந்த அமெரிக்க தொடரில் விளையாடுவது வருங்காலத்தில் பெரிய பிரச்சனை ஏற்படுத்தும் என்rறு கருதியே ராயுடு விலகியுள்ளார் என்று உறுதியாக சொல்லலாம். இதை பார்க்கும் ரசிகர்கள் இந்திய அணியிலும் வாய்ப்பு கொடுக்காத நீங்கள் இந்த முன்னாள் வீரர்களின் வாழ்வில் விளையாடலாமா என்று பிசிசிஐ மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க:IND vs WI : அப்படி இவரு என்ன பண்ணிட்டாருனு டி20 அணியில் சேன்ஸ் குடுத்தீங்க. இந்திய பவுலரை – கலாய்க்கும் ரசிகர்கள்

ஏனெனில் இங்கே சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கே வாய்ப்பு கிடைக்காத நிலைமையில் இன்னும் ஓரிரு வருடங்களை கடந்து விட்டால் ராயுடு போன்ற வீரர்களுக்கு வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு கடினமாகி விடும். அதனால் இது முன்னாள் வீரர்களின் வாழ்வில் மண்ணை அள்ளி போடும் செயல் என்று பிசிசிஐ மீது ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement