பாண்டியாவுக்கு இடமில்லை.. கீப்பராக டிகே.. தனது 2024 டி20 உ.கோ இந்திய அணியை வெளியிட்ட ராயுடு

Ambati Rayudu
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. அந்த தொடரில் விளையாடப் போகும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

குறிப்பாக விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிசப் பண்ட், கேஎல் ராகுல், இசான் கிசான், சஞ்சு சாம்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதே போல 38 வயதில் பெங்களூரு அணியில் அசத்தும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து டெல்லிக்காக விளையாடி வரும் ரிசப் பண்ட் 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்று அசத்தி வருகிறார்.

- Advertisement -

ராயுடு அணி:
எனவே விக்கெட் கீப்பராக உலகக் கோப்பையில் விளையாட அவருக்கே அதிகப்படியான வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பைக்கான தன்னுடைய 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் அம்பத்தி தேர்ந்தெடுத்துள்ளார். ஆச்சர்யப்படும் வகையில் அதில் ரிசப் பண்ட்டை கழற்றி விட்டுள்ள அவர் காலம் கடந்த தினேஷ் கார்த்திக்கை கீப்பராக தேர்ந்தெடுத்துள்ளார்.

அந்த அணியில் கேப்டனாக ரோகித் சர்மாவை தேர்ந்தெடுத்துள்ள அவர் 2வது துவக்க வீரராக யசஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்வு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து விராட் கோலி மற்றும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் ஆகியோரை ராயுடு 3, 4வது இடத்தில் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் முதன்மை ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டுள்ள அவர் 5வது இடத்தில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் ரியன் பராக்கை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து லோயர் மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணியில் அசத்தும் சிவம் துபே, ரிங்கு சிங்கை தன்னுடைய அணியில் இணைத்துள்ள அவர் ஸ்பின்னர்களாக ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ், அர்ஷிதீப் சிங் ஆகியோருடன் மயங் யாதவ் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: ரோஹித் இருந்துருக்கணும்.. இதான் இந்திய ரசிகர்களிடம் உள்ள பிரச்சனையே.. பாண்டியா பற்றி வாசிம் அக்ரம் கருத்து

குறிப்பாக லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமாகி 155 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற மயங் யாதவ் தற்சமயத்தில் சந்தித்துள்ளதால் விளையாடவில்லை. இருப்பினும் அவரையும் தேர்ந்தெடுத்துள்ள ராயுடுவின் இந்திய அணி இதோ: ரோகித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரியான் பராக், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமத் சிராஜ், அர்ஷிதீப் சிங், மயங் யாதவ்

Advertisement