ரோஹித் இருந்துருக்கணும்.. இதான் இந்திய ரசிகர்களிடம் உள்ள பிரச்சனையே.. பாண்டியா பற்றி வாசிம் அக்ரம் கருத்து

Wasim Akram
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் தடுமாறும் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னதாக இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை கழற்றிவிட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

இத்தனைக்கும் கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா மும்பை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க முக்கிய பங்காற்றினார். அதே காரணத்தால் இந்தியாவில் முழுநேர கேப்டனாகவும் முன்னேறியுள்ள அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். மறுபுறம் பதவி கைக்கு வந்ததும் முதல் போட்டியிலேயே ரோஹித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தினார்.

- Advertisement -

அக்ரம் கருத்து:
அதனால் தங்களுடைய கேப்டன் என்று பார்க்காமல் பாண்டியாவுக்கு மும்பை ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 2024 சீசனில் ரோஹித் சர்மா மும்பையின் கேப்டனாக இருந்திருக்கலாம் என்று முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அதே சமயம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவை ஏற்காமல் தங்களுடைய சொந்த வீரருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் மீது வாசிம் அக்ரம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது தான் இந்தியா, பாகிஸ்தான் வங்கதேசத்தில் உள்ள பிரச்சினையாகும். நாம் எதையும் மன்னிப்பதில்லை. பாண்டியாவின் குழந்தை பிறந்தவுடன் 20 வருடங்களுக்கு முன்பு அவர் ஏன் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதை நீங்கள் அவருக்கு நினைவூட்ட வேண்டும் என்று நாம் நம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்”

- Advertisement -

“ஆனால் நாங்கள் முன்னேற மாட்டோம் என்ற வகையில் ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே ரசிகர்கள் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் இறுதியில் அவர் உங்களுடைய வீரர். அவர் மும்பை அணிக்காக விளையாடுகிறார். அவர் உங்களை வெற்றி பெறச் செய்யக் கூடியவர். அதனால் உங்கள் சொந்த வீரருக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் அர்த்தமில்லை”

இதையும் படிங்க: தன்னுடைய முரட்டு சிக்ஸரால் காயமடைந்த கேமராமேன்.. கடைசியில் ரிஷப் பண்ட் செய்த நெகிழ்ச்சி செயல்

“நீங்கள் அவரை கொஞ்சம் விமர்சிக்கலாம். ஆனால் தொடர்ந்து விமர்சிக்காமல் ரசிகர்கள் அதிலிருந்து நகர வேண்டும். ஐபிஎல் தொடரில் இது போன்றவை நடக்கும். வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியை போல் மும்பை அணியிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் என்னுடைய பார்வையில் ரோகித் சர்மா இன்னும் ஒரு வருடம் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும். அடுத்த வருடம் வேண்டுமானால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்திருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement