- Advertisement -
ஐ.பி.எல்

கேப்டனாக இருந்துகிட்டு சாக்கு சொல்லாதீங்க.. நீங்க தான் அதை சொந்தமா செய்யனும்.. பண்ட்டை சாடிய ராயுடு

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி லக்னோவில் 40வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் லக்னோவை அதனுடைய சொந்த மண்ணில் டெல்லி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 160 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 52, மிட்சேல் மார்ஷ் 45, ஆயுஷ் படோனி 36 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய டெல்லி 17.5 ஓவரில் 161-2 ரன்களை எடுத்து மிகவும் எளிதாக வென்றது. அதிகபட்சமாக அபிஷேக் போரல் 51, கேஎல் ராகுல் 57*, கேப்டன் அக்சர் படேல் 34* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர். அதனால் 9 போட்டிகளில் லக்னோ தங்களுடைய 4வது தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

சொதப்பிய பண்ட்:

முன்னதாக அப்போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிசப் பண்ட் 7வது இடத்தில் களமிறங்கி டக் அவுட்டானது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏற்கனவே மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடி வந்த அவர் இப்போட்டியில் கடைசி ஓவரில் 2 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டானார். அதற்கு இம்பேக்ட் வீரர் ஆயுஷ் படோனி, மயங் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவே தாம் 7வது இடத்தில் பேட்டிங் செய்ததாக ரிஷப் பண்ட் கூறினார்.

இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பண்ட் முன்னதாகவே பேட்டிங் செய்ய வராதது லக்னோ தோல்வியை சந்திக்க காரணமானதாக அம்பத்தி ராயுடு விமர்சித்துள்ளார். மேலும் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் சாக்கு சொல்லாமல் பயிற்சியாளர், உரிமையாளர்களை தலையிட விடாமல் அனைத்து முடிவுகளையும் தாமே சொந்த வழியில் எடுக்குமாறு ராயுடு கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சாக்கு சொல்லாதீங்க:

“ரிஷப் பண்ட் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் தனது சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும். சில நேரங்களில் மைதானத்தில் இப்படி நீங்கள் வெளிப்படையாக பேசிக்கொள்ளும் காட்சிகள் நன்றாக இருக்காது. ஏனெனில் நீங்கள் அனைத்து முடிவுகளையும் மூடப்பட்ட அறையில் பேசி எடுக்க வேண்டும். எந்த அழுக்கு துணிகளையும் வெளியே கழுவ விரும்பாதீர்கள்”

இதையும் படிங்க: தோனியே அதை ஒதுக்கிட்டாரு.. சிஎஸ்கே கம்பேக் கொடுக்காது.. தோல்விக்கு இதான் காரணம்.. ராயுடு வெளிப்படை

“லக்னோ அணியில் முடிவுகளை எடுக்கும் கட்டுப்பாட்டை ரிஷப் பண்ட் தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும். இனிமேலும் அவர் சாக்கு சொல்லாமல் மேலே வந்து பேட்டிங் செய்ய வேண்டும். கிரிக்கெட் என்பது கேப்டன் தலைமை தாங்கும் விளையாட்டு என்பதை நாம் அறிவோம். அடுத்து வரும் போட்டிகளில் மயங் யாதவ் உள்ளே வந்தாலும் ரிஷப் பண்ட் மேலே பேட்டிங் செய்ய வேண்டும். 7வது இடத்தில் அவர் விளையாடியது லக்னோ அணியில் பதற்றம் இருப்பதை தெளிவாக காட்டியது என்று கூறினார்.

- Advertisement -