தோனியே அதை ஒதுக்கிட்டாரு.. சிஎஸ்கே கம்பேக் கொடுக்காது.. தோல்விக்கு இதான் காரணம்.. ராயுடு வெளிப்படை

Ambati Rayudu
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளை சந்தித்துள்ள அந்த அணி கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. அதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல எஞ்சியுள்ள 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் ஆரம்பம் முதலே அந்த அணிக்கு துவக்க வீரர்கள் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடத் தடுமாறுகிறார்கள். அதே போல மிடில் ஓவர்களில் சிவம் துபே தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்கள் குவிக்கத் திணறுகிறார்கள். அதன் காரணமாக லோயர் மிடில் ஆர்டரில் தோனி வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடியாமல் ஏமாற்றத்தையே கொடுக்கிறார்.

- Advertisement -

தோனியே ஒத்துக்கிட்டாரு:

அதன் காரணமாக இங்கிருந்து சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாது என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது. சொல்லப்போனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முயற்சிப்போம் இல்லையெனில் அடுத்த வருடம் வலுவாக கம்பேக் கொடுப்போம் என்று கேப்டன் தோனியே வெளிப்படையாக சொல்லி விட்டார். இந்நிலையில் சென்னை அணி பிளே ஆஃப் செல்லாது என்பதை தோனியே ஒப்புக்கொண்டுள்ளதாக ராயுடு தெரிவித்துள்ளார்.

மேலும் மிடில் ஓவர்களில் ரன்கள் அடிக்கத் தவறுவதே சென்னை அணியின் தோல்விகளுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வருடம் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுப்பதை நான் பார்க்கப் போவதில்லை. தோனியே அதைப்பற்றி போட்டியின் முடிவில் சொன்னார். சென்னை அணி அடுத்த வருடத்தை இப்போதே பார்க்கத் துவங்கியுள்ளதாக தோனி கூறினார்”

- Advertisement -

கம்பேக் வாய்ப்பில்லை:

“அவர்கள் இளம் வீரர்களை உருவாக்கி மோசமான கிரிக்கெட்டை விளையாடும் அணுகுமுறையை கைவிட்டு பயமற்ற கிரிக்கெட்டை விளையாடும் கலாச்சாரத்தை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்கள் நேர்மறையான நோக்கத்துடன் விளையாட வேண்டும். ஒருவேளை ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர் முழுமையாக அசத்தினால் இங்கிருந்து சென்னை மீண்டு வர வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க: தோனி மாதிரி முயற்சித்தா சொதப்பிடுவீங்க.. தோனி லெவலை தொடத பண்ட் இதை செஞ்சா போதும்.. புஜாரா அட்வைஸ்

“மும்பைக்கு எதிராக மீண்டும் அவர்கள் 7 மிடில் ஓவர்களில் வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வியைக் கொடுத்தது. அவர்கள் இங்கே டி20 போல விளையாடவில்லை. மிடில் ஓவர்களில் சிஎஸ்கே ஆரோக்கியமான ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக விளையாட வேண்டும். அவர்களிடம் அதிரடியாக விளையாடும் நோக்கத்தில் தடுமாற்றம் இருக்கிறது. நீங்கள் தோல்வியை சந்திக்கலாம். ஆனால் சண்டையிட வேண்டும். வெற்றிக்கு 190 ரன்கள் அடிக்கப்பட வேண்டிய மும்பை பிட்ச்சில் சென்னை குறைந்தபட்ச ஸ்கோரை கூட அடிக்கவில்லை” எனக் கூறினார்.

Advertisement