தோனி மாதிரி முயற்சித்தா சொதப்பிடுவீங்க.. தோனி லெவலை தொடாத பண்ட் இதை செஞ்சா போதும்.. புஜாரா அட்வைஸ்

C Pujara
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி லக்னோவில் 40வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் லக்னோவை அதனுடைய சொந்த மண்ணில் டெல்லி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் லக்னோ நிர்ணயித்த 160 ரன்களை இலக்கை 17.5 ஓவரில் எடுத்த டெல்லி தங்களுடைய 6வது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

லக்னோவுக்கு அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 52, மிட்சேல் மார்ஷ் 45, ஆயுஷ் படோனி 36 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் பேட்டிங் துறையில் கே.எல். ராகுல் 57*, அபிஷேக் போரல் 51, கேப்டன் அக்சர் படேல் 34* ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினர். இதையும் சேர்த்து லக்னோ 9 போட்டிகளில் 4வது தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தோனி போல ரிஷப் பண்ட்:

முன்னதாக அந்தப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிசப் பண்ட் வழக்கத்துக்கு மாறாக 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். இந்த வருடம் 27 கோடிக்கு லக்னோ கேப்டனாக விளையாடி வரும் அவர் 4, 5 போன்ற இடங்களில் விளையாடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த நிலையில் இந்தப் போட்டியில் 7வது இடத்தில் கடைசி ஓவரில் களமிறங்கிய அவர் 2 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டானது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்நிலையில் அப்போட்டியில் தோனி போல முயற்சித்து ரிஷப் பண்ட் சொதப்பியதாக முன்னாள் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். மேலும் தோனி போல ஃபினிஷர் லெவலுக்கு இன்னும் வளராத ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் விளையாடுவதே சரியாக இருக்கும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி புஜாரா பேசியது பின்வருமாறு. “அந்த முடிவுக்குப் பின் என்ன செயல்முறை இருக்கிறது என்பதை எனக்குத் தெரியாது”

- Advertisement -

புஜாரா அட்வைஸ்:

“ஆனால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக மேலே பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் எம்எஸ் தோனி போல முயற்சி செய்கிறார். ஆனால் ரிசப் பண்ட் எந்த விதத்திலும் அந்த லெவலுக்கு அருகில் இல்லை. அவர் ஃபினிஷர் கிடையாது. எனவே அவர் அந்த வேலையை செய்யக்கூடாது”

இதையும் படிங்க: மாயங்க் யாதவை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தாது ஏன்? 7 ஆவது இடத்தில் களமிறங்கியது ஏன்? – ரிஷப் பண்ட் விளக்கம்

“இப்போதும் ரிஷப் பண்ட் 6 – 15 வரையிலான மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்வதற்கு சரியானவர் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார். மொத்தத்தில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டை போல டி20 போட்டிகளில் போட்டிகளில் அசத்தத் தடுமாறுகிறார் என்பது மீண்டும் நிரூபணமாகி வருகிறது. எனவே எஞ்சிய 3 போட்டிகளிலாவது அவர் நன்றாக பேட்டிங் செய்வது அவசியமாகிறது.

Advertisement