இதுக்குமேல எனக்கு என்ன வேனும்? என் வாழ்நாள் முழுசும் இதை நான் மறக்க மாட்டேன் – ஆனந்த கண்ணீருடன் விடைபெற்ற ராயுடு

Rayudu
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு நேற்று நடைபெற்ற 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிபோட்டியோடு ஐ.பி.எல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். ஏற்கனவே இந்த தொடரின் கடைசி இறுதிப்போட்டிக்கு முன்னதாக இதுவே தனது கடைசி ஐ.பி.எல் போட்டி என்றும் இதற்கு மேல் தான் யு டர்ன் எடுக்கப்போவதில்லை என்று தனது சமூகவலைதள பக்கத்தின் மூலம் தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

Rayudu 1

- Advertisement -

அதனால் ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி வெற்றியுடன் அவர் பிரியாவிடை பெறவேண்டும் என்று ரசிகர்களும் அவருக்காக பிராத்தனை செய்தனர். அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றியுடன் அவர் விடைபெற்றார். அதோடு நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பின்னர் பரிசளிப்பு விழாவின் போது கோப்பையை ராயுடுவின் கைகளில் தந்து தோனி அவரை கவுரவித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமான அவர் 2017 ஆம் ஆண்டு வரை அந்த அணியில் இடம்பிடித்து 8 ஆண்டுகள் விளையாடினார். அந்த 8 ஆண்டுகளில் அவர் 3 முறை சாம்பியனான மும்பை அணியில் இடம்பிடித்திருந்தார். அதேபோன்று 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடினார்.

Rayudu 2

இப்படி சென்னை அணிக்காக விளையாடிய 6 ஆண்டுகள் 3 முறை அவர் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் விளையாடியுள்ளார். இதன்மூலம் 6 முறை கோப்பையை வென்ற அணிகளில் அவர் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஐ.பி.எல் தொடரில் 14 ஆண்டுகள் விளையாடிய அவர் நேற்றுடன் விடைபெற்றாலும் இந்த 14 ஆண்டுகளில் அவர் மும்பை மற்றும் சென்னை என 2 அணிக்காக மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று கோப்பையை வென்றதும் மைதானத்தில் ஆனந்த கண்ணீருடன் காணப்பட்ட அவர் தனது மகிழ்ச்சியையும் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். அந்தவகையில் அம்பத்தி ராயுடு பேசியதாவது : இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இதற்கு மேல் எனக்கு என்ன வேனும். இதுவொரு நம்ப முடியாத வெற்றி. ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அற்புதமான 2 அணிகளில் விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : CSK vs GT : குஜராத் தோல்வி அடைந்தாலும் தமிழக வீரரை மனதார பாராட்டி சச்சின் வெளியிட்ட பதிவு – விவரம் இதோ

இந்த ஒரு வெற்றி போதும். என் வாழ்க்கை முழுசும் இந்த வெற்றியை நான் மறக்கமாட்டேன். கடந்த 30 ஆண்டுகளாக கிரிக்கெட்டிற்காக கடினமாக உழைத்தேன். இறுதியில் இப்படி ஒரு வெற்றியுடன் எனது கரியரை நிறைவு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த தருணத்தில் எனது குடும்பம் மற்றும் எனது தந்தைக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் நின்றிருக்க முடியாது என ஆனந்த கண்ணீருடன் ராயுடு பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement