கண்ணீருடன் விடைபெற்ற ராயுடு – கடைசி போட்டியில் மாஸ் பேட்டிங், ரோஹித் சர்மாவின் மாஸ் சாதனை சமன்

Rayudu
- Advertisement -

அனல் பறந்து வந்த ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்று அதிக கோப்பைகளை வென்ற அணியான மும்பையின் சாதனையை சமன் செய்தது. மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கிய அந்த போட்டி மழையால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/4 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் சரவெடியாக 96 (47) ரன்களும் சஹா 54 (39) ரன்களும் எடுத்தார். அதைத்தொடர்ந்து சென்னை களமிறங்கிய போது மழை வந்ததால் 2 மணி நேர தாமதத்திற்கு பின் 15 ஓவரில் 171 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை துரத்திய சென்னைக்கு 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான அடித்தளம் கொடுத்த ருதுராஜ் கைக்வாட் 26 (16) ரன்களும் டேவோன் கான்வே 47 (25) ரன்களும் எடுத்து அவுட்டாக அடுத்து வந்த ரகானே பட்டாசாக 27 (13) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மாஸ் லெஜெண்ட் ராயுடு:
அதே சமயம் மறுபுறம் தடுமாறிய சிவம் துபே 12வது ஓவரில் 2 சிக்ஸர்களை அடித்து வெற்றிக்கு போராடினார். அவருடன் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய அம்பத்தி ராயுடு அடுத்ததாக வந்து 13வது ஓவரில் மோகித் சர்மா வீசிய முதல் 3 பந்துகளில் 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு அழுத்தத்தை சுக்குநூறாக உடைத்து 19 (8) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த கேப்டன் தோனி கோல்டன் டக் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது.

அதில் முதல் 4 பந்துகளில் ஜடேஜா, துபே ஆகிய இருவருமே சிங்கிள் மட்டுமே எடுத்ததால் தோல்வி உறுதியென்று சென்னை ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் கடைசி 2 பந்துகளில் சிக்ஸரையும் பவுண்டரியும் பறக்க விட்ட ஜடேஜா 15* (6) ரன்களும் துபே 32* ரன்களும் எடுத்து சூப்பர் பினிசிங் கொடுத்து சென்னையை வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் மோஹித் சர்மா 3 விக்கெட், நூர் அஹமத் 2 விக்கெட் எடுத்தும் குஜராத் தன்னுடைய கோட்டையான அகமதாபாத்தில் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

இந்த வெற்றிக்கு நிறைய வீரர்கள் முக்கிய பங்காற்றிய போதிலும் தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடிய ராயுடு 19 (8) ரன்களை 237.50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது முக்கிய காரணமாக அமைந்தது. அப்படி தன்னுடைய கடைசி போட்டியில் த்ரில் வெற்றி பெற்றதால் குழந்தையைப் போல் தேம்பி அழுத ராயுடு தொகுப்பாளர் ஹர்சா போக்லே எடுத்த பேட்டியில் உணர்ச்சிகளால் பேச முடியாமல் தடுமாறினார்.

ருப்பினும் இளம் வயதில் வளர துவங்கியது முதல் கடந்த 30 வருடங்களாக உழைத்த உழைப்புக்கு இந்த வெற்றி பரிசாக கிடைத்துள்ளதாகவும் இதை நினைத்து எஞ்சிய வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தது ரசிகர்களை நிகழ்ச்சியில் ஆழ்த்தியது. ஹைதராபாத் சேர்ந்த அவர் 2010 முதல் மும்பைக்காக விளையாடி 2013, 2015, 2017 ஆகிய காலகட்டங்களில் விக்கெட் கீப்பராக 3 கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அதை விட 2018இல் 603 ரன்களை விளாசி சென்னை 3வது கோப்பையை வென்று அபார கம்பேக் கொடுக்க கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் 2021, 2023 கோப்பையையும் வெல்வதற்கு உதவினார். அப்படி மொத்தம் 6 கோப்பைகளை வென்றுள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற ரோகித் சர்மாவின் வரலாற்று சாதனை சமன் செய்தார். இதற்கு முன் ரோகித் சர்மா மும்பைக்காக 5 டெக்கான் அணிக்காக 1 என மொத்தம் 6 கோப்பைகளை வென்றுள்ளார். முன்னதாக 2018இல் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2019 உலகக்கோப்பையில் விளையாட தகுதியானவராக காத்திருந்த அவரை முப்பரிமாண வீரர் வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய் சங்கரை தேர்வு செய்த தேர்வுக்குழு கழற்றி விட்டது.

இதையும் படிங்க:IPL Final : இவ்வளவு போராடி ஜெயிச்ச இந்த கோப்பையே அவருக்காக தாங்க – நெகிழவைத்த ஜடேஜாவின் பேட்டி

மேலும் 3டி ட்வீட் போட்டதை வன்மமாக மாற்றிய எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு வாய்ப்பு கொடுக்காததால் மனமுடைந்த ராயுடு 33 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்படி வன்மத்தால் சர்வதேச கேரியர் வீழ்த்தப்பட்டாலும் ஐபிஎல் தொடரில் 6 கோப்பைகளை வென்ற ஜாம்பவானாக ஓய்வு பெற்ற நாயுடுவின் கையில் வெற்றி கோப்பையை தோனி கொடுத்து பாராட்டியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

Advertisement