IPL Final : இவ்வளவு போராடி ஜெயிச்ச இந்த கோப்பையே அவருக்காக தாங்க – நெகிழவைத்த ஜடேஜாவின் பேட்டி

Ravindra-Jadeja
- Advertisement -

அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சி.எஸ்.கே அணியானது இறுதிப்பந்தில் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் சென்னை அணி பெற்ற வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சி.எஸ்.கே அணியின் நட்சித்திர ஆல்ரவுண்டரான ஜடேஜாவும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல.

Jadeja

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. இந்த இன்னிங்சில் 4 ஓவர்கள் முழுவதுமாக பந்துவீசிய ஜடேஜா 38 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அதிலும் இந்த தொடர் முழுவதுமே பேட்டிங்கில் அசத்தி வந்த சுப்மன் கில்லை முதல் விக்கெட்டாக வீழ்த்திய ஜடேஜா குஜராத் அணியின் சரிவை தனது பந்துவீச்சில் மூலம் துவங்கி வைத்தார்.

அதன்பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே அணி விளையாட துவங்கிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அப்போது 15 ஓவர்களில் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்று டக் வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இப்படி பெரிய இலக்கு இருந்தாலும் இந்த சேஸிங்கை சி.எஸ்.கே சிறப்பாக கையாண்டு வெற்றி கண்டது.

Jadeja and Dhoni

இந்த சேஸிங்கின் போது பேட்டிங்கிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 6 பந்துகளில் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரி என 15 ரன்கள் அடித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக போட்டியின் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி 2 பந்துகளிலும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அட்டகாசமாக சென்னை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ஜடேஜா கூறுகையில் : என்னுடைய சொந்த மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் இந்த 5 ஆவது கோப்பையை நாங்கள் வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த மைதானத்தில் சி.எஸ்.கே ரசிகர்கள் அதிகளவில் வந்து கொடுத்த ஆதரவினை பார்க்கும்போது அற்புதமாக இருக்கிறது. மழை நிற்கும் வரை இவ்வளவு நேரம் ஆகியும் எங்களுக்காக காத்திருந்த சி.எஸ்.கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இதையும் படிங்க : வீடியோ : கண்ணீருடன் இடுப்பில் கட்டிப்பிடித்த தல தோனி – அன்று அவுட்டாக சொன்ன சிஎஸ்கே ரசிகர்களை கொண்டாட வைத்த ஜடேஜா

இந்த வெற்றியை எங்கள் அணியில் உள்ள ஒரு ஸ்பெஷல் மெம்பருக்கு வழங்க விரும்புகிறேன். அதுவேறு யாருமில்லை தோனி தான். கடைசி 2 பந்துகளில் 10 ரன்களை எப்படியாவது அடித்துவிட வேண்டும் என்று பேட்டை சுழற்ற தயாராக இருந்தேன். மேலும் மோஹித் சர்மா பந்தினை மெதுவாக தான் வீசுவார் எனபதை கணித்த நான் பவுண்டரி லைனுக்கு நேராக அடிக்க நினைத்தேன். மீண்டும் ஒருமுறை சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றி. எங்களை தொடர்ச்சியாக நீங்கள் ஆதரித்து வருகிறீர்கள் இதே ஆதரவினை தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நம்புவதாக ஜடேஜா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement