- Advertisement -
ஐ.பி.எல்

சீக்கிரம் அவரை மீட் பண்ணி பேசுங்க.. ரொம்ப பெரிய ஆளா வருவீங்க.. வைபவ் சூர்யவன்ஷிக்கு – ராயுடு அறிவுரை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலத்தின் போது மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 14 வயதான அவர் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என 36 ரன்கள் சராசரியுடன் 252 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுரை வழங்கிய : அம்பத்தி ராயுடு

அதிலும் குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடும் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்து வரலாற்று சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி இருந்தார். அவரது இந்த அபாரமான செயல்பாடு காரணமாக தற்போது இந்திய ஏ அணியிலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

- Advertisement -

இதன் காரணமாக வெகுவிரைவில் குறைந்த வயதிலேயே அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகவும் வாய்ப்பு தென்படுகிறது. இந்நிலையில் மிகத் திறமை வாய்ந்த இளம் வீரராக பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி தனது அடுத்த கட்ட கிரிக்கெட் கரியரை வெகு சிறப்பாக ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்? என்று குறித்த சில ஆலோசனைகளை இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்மஹத்தி ராயுடு வழங்கியுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : வைபவ் சூர்யவன்ஷியிடம் பிரைன் லாராவை போன்ற பேட்டிங் டெக்னிக் இருப்பதால் அவரிடம் ஆலோசனைகளை பெற்று தன்னிடம் இருக்கும் சிறு சிறு குறைகளை நிவர்த்தி செய்தால் மிகப்பெரிய வீரராக மாறக்கூடிய வாய்ப்பு அவரிடம் உள்ளது. அவருடைய பேட் வேகம் என்பது மிகச் சிறப்பாக உள்ளது. பந்தை அவர் அடிக்கும் விதம் அற்புதமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் அவர் அதனை மெருகேற்ற வேண்டியது அவசியம்.

- Advertisement -

எனவே அவரைப் போன்று பேட்டிங் செய்யும் லாராவிடமிருந்து பேட்டிங் செய்யும் நுட்பத்தை அவர் கற்றுக் கொண்டால் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுக்க அனைத்து தகுதிகளும் வைபவ் சூர்யவன்ஷியிடம் உள்ளது என்று அம்பத்தி ராயுடு கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : அந்த நாள் ஐபிஎல்’லயும் ரிட்டையர் ஆகிடுவேன்னு.. விராட் பையா என்கிட்ட சொன்னாரு.. இளம் ஆர்சிபி வீரர் பேட்டி

தற்போது தனது திறமையால் இந்த இடத்தை தொட்டுள்ள அவருக்கு மேலும் அதிகமாக அழுத்தங்களை கொடுத்து அவரை திணிக்கக்கூடாது. இயல்பாக அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு சுதந்திரம் வழங்கினால் நிச்சயம் வைபவ் சூர்யவன்ஷி எதிர்காலத்தில் மிகப்பெரிய வீரராக உருவெடுப்பார் என அம்பத்தி ராயுடு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -