அந்த நாள் ஐபிஎல்’லயும் ரிட்டையர் ஆகிடுவேன்னு.. விராட் பையா என்கிட்ட சொன்னாரு.. இளம் ஆர்சிபி வீரர் பேட்டி

Swastik Chikara
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார். தற்போது 36 வயதாகும் அவர் அடுத்ததாக இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறார். அத்துடன் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அவர் தொடர்ந்து விளையாட உள்ளார்.

2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று இந்தியாவுக்காக அறிமுகமான அவர் இதுவரை 27000+ ரன்கள் 82 சதங்கள் அடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 15 வருடங்களில் இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய விராட் கோலி வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாகவும் சாதனைப் படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் ஓய்வு நாள்:

2008 முதல் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் ஒரே வீரர் என்ற சாதனைப் படைத்துள்ள விராட் கோலி கடந்த சீசனில் 17 வருடங்கள் கழித்து காத்திருந்து முதல் ஐபிஎல் கோப்பையை வென்றார். இந்நிலையில் விராட் கோலி எப்போதும் சிங்கத்தை போல் விளையாடக்கூடியவர் என்று ஸ்வஸ்திக் சிக்காரா கூறியுள்ளார். மேலும் ஃபிட்டாக இருக்கும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று விராட் கோலி தம்மிடம் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார்.

என்று தம்மால் முழுமையாக விளையாட முடியாமல் இம்பேக்ட் வீரராக களமிறங்கும் சூழ்நிலை வருகிறதோ அன்று ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெறுவேன் என்று விராட் கோலி சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணிக்காக விளையாடும் 20 வயது வீரரான ஸ்வஸ்திக் கடந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அப்போது விராட் கோலி தம்மிடம் சொன்னது பற்றி ஸ்வஸ்திக் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஆர்சிபி வீரர் தகவல்:

“ஃபிட்டாக இருக்கும் வரை கிரிக்கெட்டில் நான் விளையாடுவேன் என்று விராட் பையா சொன்னார். அதுவரை சிங்கத்தைப் போல் விளையாடுவேன் என்றும் சொன்னார். களத்தில் முழுமையாக 20 ஓவர்கள் ஃபீல்டிங் செய்து பின்னர் பேட்டிங் செய்வேன். என்று இம்பேக்ட் வீரராக களமிறங்க வேண்டிய நாள் வருகிறதோ, அன்று நான் கிரிக்கெட்டிலிருந்து வெளியேறுவேன் என்றும் விராட் பாய் கூறினார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆஸியில் விராட், ரோஹித்துக்கு ஃபேர்வெல்? அக்டோபர் மாதத்துடன் பிசிசிஐ ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா பேட்டி

இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாட உள்ளார். 2027 உலகக் கோப்பை வரை அவர் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு தேர்வுக் குழுவினர் மற்றும் பிசிசிஐ ஆதரவு தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement