உங்க தலையில் மண்ணை வாரி போட்டுக்க தயாரா இருங்க.. இந்திய அணியை எச்சரித்த அலிசா ஹீலி

Alyssa healy
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி அங்கு 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை ஆஸ்திரேலியா அலமாரியில் அடுக்குவதற்கு இடமில்லாத அளவுக்கு நிறைய உலகக் கோப்பைகளை வென்று மகளிர் கிரிக்கெட்டின் முடி சூடாத அரசியாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

குறிப்பாக 2020 டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்திய மகளிர் அணியை தோற்கடித்த ஆஸ்திரேலியா 2022 காமன்வெல்த் போட்டிகளின் ஃபைனலிலும் தங்கப் பதக்கத்தை பறித்து தோல்வியை கொடுத்தது. எனவே சொந்த மண்ணாக இருந்தாலும் இந்தியாவை நிச்சயம் இத்தொடரில் ஆஸ்திரேலியா தோற்கடிப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்றால் மிகையாகாது.

- Advertisement -

தயாரா இருங்க:
மறுபுறம் என்ன தான் ஹர்மன்ப்ரீத் கௌர், மந்தனா போன்ற தரமான வீராங்கனைகள் இருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டில் இன்னும் 90களில் எப்படி ஆடுவர் அணி திண்டாடியதோ அதே போன்ற ஆட்டத்தையே மகளிரணி வெளிப்படுத்தி வருகிறது. அதனால் இத்தொடரில் ஓரிரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா வென்றால் கூட அது பாராட்டுக்குரிய செயல்பாடாக இருக்கும்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்காக நிறைய உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து மகத்தான வீராங்கனையாக செயல்பட்ட மெக் லென்னிங் சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து மற்றொரு நட்சத்திர வீராங்கனை மற்றும் நட்சத்திர வீரர் மிட்சேல் ஸ்டார்க்கின் மனைவி அலிசா ஹீலி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் வரும் டிசம்பர் 21 – 24ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இந்தியா தங்களுக்கு மிகவும் பிடித்த சுழலுக்கு சாதகமான பிட்ச்சை போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானத்தில் அமைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அலிசா ஹீலி கூறியுள்ளார். ஆனால் அப்படி செய்தால் இந்தியா தங்களது தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டு தோல்வியை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக எச்சரிக்கும் அவர் இது பற்றி சிட்னி ஹெரால்ட் பத்திரிகையில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: எனக்கு விராட் கோலி பத்தி நல்லா தெரியும். அவரு அந்த சேன்ஸ்ஸ் மிஸ் பண்ண மாட்டாரு – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

“அவர்கள் எம்மாதிரியான பிட்ச்சை தயாரிப்பார்கள் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஏனெனில் எங்களிடமும் நல்ல தரமான சுழல் பந்து வீச்சு கூட்டணி இருக்கிறது. எனவே உங்கள் சொந்த ஆபத்தில் அதை செய்யுங்கள். இந்தியர்களிடமும் நல்ல வலுவான சுழல் பந்து வீச்சு கூட்டணி இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்த உலகின் சிறந்த லெக் ஸ்பின்னரான அஷ் கார்ட்னர் எங்களுடைய அணியில் இருக்கிறார். எனவே உங்களுடைய சொந்த மண்ணில் தோற்பதற்காக சுழலும் பிட்ச்சை தயார் செய்யுங்கள்” என்று கூறினார்.

Advertisement