
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. வரலாற்றில் அவ்விரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. எனவே இம்முறை அபாரமாக விளையாடி முதல் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை வெல்லும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாகவும் கணிப்பாகவும் இருக்கிறது. ஏனெனில் இம்முறை ரஜத் படிதார் தலைமையில் அற்புதமாக விளையாடும் பெங்களூரு வெளியூரில் பங்கேற்ற 7 போட்டிகளையும் வென்ற முதல் அணியாக வரலாறு காணாத சாதனையைப் படைத்தது. மேலும் இம்முறை அந்த அணியின் 9 வெவ்வேறு வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்று மேட்ச் வின்னர்களாக ஜொலித்து வருகின்றனர்.
எனவே விராட் கோலிக்காக 18 வருடங்கள் கழித்து பெங்களூரு கோப்பையை வெல்ல வேண்டும் என்பது பலரது விருப்பமாகவும் இருக்கிறது. இந்நிலையில் இம்முறை எப்படியாவது கோப்பையை வென்றாக வேண்டும் என்ற அழுத்தமும் எதிர்பார்ப்பும் ஆர்சிபி மேலே இருப்பதாக ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலிஷா ஹீலி தெரிவித்துள்ளார். மறுபுறம் பஞ்சாப் மீது பெரிய அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதைப் பயன்படுத்தி ஆர்சிபி அணியிடமிருந்து பஞ்சாப் கோப்பையை பறிக்கப்போவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இதுவரை அவ்விரு அணிகளும் கோப்பையை வென்றதில்லை. எனவே இப்போட்டியில் அந்த 2 அணிகளிடமும் ஏதோ ஒரு சமயத்தில் பதற்றம் இருக்கும். குறிப்பாக கடந்தக் காலங்களில் கோப்பையை நெருங்கியும் கோட்டை விட்ட ஆர்சிபி அணி இம்முறை எப்படியாவது வெல்ல விரும்புகிறார்கள்”
“ஆனால் பஞ்சாப் நெருக்கடிகள் இல்லாமல் வந்து அவர்களிடம் இருந்து கோப்பையை திருடப் போகிறார்கள். விராட் கோலிக்காக நான் வருந்துகிறேன். ஒவ்வொரு முறையும் பெங்களூரு வெல்லாத போது அதை விராட் கோலியின் தவறு என்று அனைவரும் கருதுகின்றனர். உண்மையில் அப்படி கிடையாது. ஆனால் அவர் அந்த அணியின் முகமாக இருக்கிறார்”
இதையும் படிங்க: அந்த ஃபைனலை ஐபிஎல் ஃபைனலில் ரிப்பீட் செய்வேன்னு படிதாரிடம் சொல்லிருக்கேன்.. ஸ்ரேயாஸ் பேட்டி
“அதனால் விராட் கோலி மீண்டும் தோற்று விட்டாரா? விராட் கோலி இன்னும் கோப்பையை வெல்ல வில்லவில்லையா? என்று அனைவரும் பேசுகின்றனர். எனவே விராட் கோலி மீது அனைத்து அழுத்தமும் இருக்கிறது. சொல்லப்போனால் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்காக விராட் கோலியை பெரிதும் சார்ந்திருக்கிறது” என்று கூறினார்.