அவருக்கு எதிரா பந்து வீச நான் ரொம்ப தடுமாறினேன்.. இந்திய வீரர் பற்றி – டேல் ஸ்டெய்ன் ஓப்பன்டாக்

Dale Styen 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியை ஐசிசி 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக வழி நடத்தி கோப்பையை வென்று கொடுக்கும் மாபெரும் பொறுப்புடன் ரோகித் சர்மா களமிறங்க உள்ளார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறியதால் கடந்த 2011 உலகக் கோப்பையில் வாய்ப்பு பெறாத அவர் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அப்போதைய கேப்டன் தோனியால் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

அதை பொன்னாக மாற்றி 3 இரட்டை சதங்கள் விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து மேட்ச் வின்னராக உருவெடுத்த அவர் கடந்த 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து மாபெரும் உலக சாதனை படைத்தார். அந்த வகையில் நவீன கிரிக்கெட்டில் மிட்சேல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட உலகின் பல தரமான பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட அவர் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

ஸ்டைன் பாராட்டு:
அதே போல சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சரித்திரமும் படைத்துள்ள அவர் கிட்டத்தட்ட உலகின் பெரும்பாலான பவுலர்களை சிக்ஸர்களாக அடிப்பதில் வல்லவராக திகழ்கிறார். இருப்பினும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் நட்சத்திர அதிரடி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைனை தம்முடைய கேரியரில் எதிர்கொள்வதற்கு ரொம்ப சிரமப்பட்டதாக ரோகித் சர்மா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் கூட தொடர்ந்து துல்லியமாக ஸ்விங் செய்வதில் ஸ்டைன் கில்லாடியாக இருந்ததாகவும் ரோகித் சர்மா பாராட்டியிருந்தார். இந்த சூழ்நிலையில் தம்முடைய கேரியரில் ரோஹித் சர்மாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவதற்கு எப்போதுமே சிரமப்பட்டதாக டேல் ஸ்டைன் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் எப்போதுமே ரோகித் சர்மாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவதற்கு தடுமாறியுள்ளேன். அவர் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். தற்போது அணியை முன்னின்று சிறப்பாக வழி நடத்து வருகிறார்” என்று பாராட்டினார். அப்படி ரோகித் சர்மா சொன்ன அடுத்த 2 நாட்களில் இவர் இப்படி சொல்லியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: உ.கோ பிளேயிங் லெவனில்.. எடுத்த எடுப்பில் அவருக்கும் சூர்யாவுக்கும் சான்ஸ் கொடுக்காதீங்க.. சேவாக் பேட்டி

முன்னதாக ரோஹித் சொன்னது போல துல்லியமான வேகம், ஸ்விங், பவுன்ஸ் ஆகிய மூன்றையும் கலந்து சச்சின் உட்பட அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்த பெருமைக்குரிய ஸ்டெயின் உலகிலேயே டெஸ்ட் தரவரிசையில் நீண்ட வருடங்கள் நம்பர் ஒன் பவுலராக இருந்து உலக சாதனை படைத்தவர். தற்போது ஓய்வுக்கு பின் அவர் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement