
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்று தற்போது உலக நாடுகள் அனைத்தும் தங்களது நாட்டில் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இது போன்ற டி20 லீக் போட்டிகளுக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெருமளவு வருவாய் கிடைக்கும் என்பதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அமைப்புகளும் தங்களது நாட்டில் டி20 லீக் தொடர்களை உருவாக்கி நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது நாட்டில் டி20 லீக் போட்டிகளை அறிமுகப்படுத்தியது. அந்த தொடரில் பெரும்பாலும் இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் அணிகளே அந்த அணிகளை வாங்கி உரிமையாளர்களாக இருக்கின்றனர்.
ஆனாலும் ஐபிஎல் தொடரை போன்று பெரிய அளவில் எந்த ஒரு டி20 லீக் தொடராலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. குறிப்பாக தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 லீக் சிறப்பாக நடைபெற்றாலும் பெரிய அளவில் உலக ரசிகர்களின் மத்தியில் ஆதரவை பெறாமல் இருக்கிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் இந்த டி20 லீக் கிரிக்கெட்டில் இந்திய நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் எந்த இரண்டு வீரர்கள் இடம் பெற்றால் அந்த தொடர் சிறப்பாக இருக்கும் என்ற கேள்விக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஆலன் டொனால்டு பதிலளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி மற்றும் பும்ராவை தான் நான் இந்த தொடரில் விளையாட முதன்மை வீரர்களாக தேர்வு செய்தேன். ஏனெனில் அவர்கள் இருவரும் இந்த தொடரில் விளையாடினால் நிச்சயம் எங்கள் நாட்டு டி20 லீக் கிரிக்கெட்டும் வேறு கட்டத்திற்கு செல்லும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : பும்ராவையே அடிச்சு நொறுக்கிட்டீங்க.. நீங்க தான் அதுக்கு தகுதியானவர்.. ஹெட்டை பாராட்டிய இயன் சேப்பல்
அவர் கூறியது போன்றே அவர்கள் இருவரும் அங்கு விளையாடினால் நிச்சயம் அந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பு பெறும். ஆனால் பி.சி.சி.ஐ-யின் விதிமுறைப்படி இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறாத எந்த ஒரு வீரரும் வெளிநாட்டு தொடர்களில் விளையாடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.