பும்ராவையே அடிச்சு நொறுக்கிட்டீங்க.. நீங்க தான் அதுக்கு தகுதியானவர்.. ஹெட்டை பாராட்டிய இயன் சேப்பல்

Ian Chappell
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அந்தத் தொடரில் 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. முன்னதாக இந்தத் தொடரில் இந்திய அணிக்கு டிராவிஸ் ஹெட் மிகப்பெரிய சவாலை கொடுத்து வருகிறார்.

2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் சதத்தை அடித்த அவர் ஏற்கனவே இந்தியாவை தோற்கடித்ததை மறக்க முடியாது. அதே வேகத்தில் இந்தத் தொடரிலும் அடுத்தடுத்த 2 சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார். இந்நிலையில் தரமான ஜஸ்ப்ரித் பும்ராவை சாதாரண பவுலர் போல டிராவிஸ் ஹெட் அடித்து நொறுக்கி வருவதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

நொறுக்கிட்டீங்க போங்க:

எனவே பட் கமின்ஸ்க்கு பின் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவை வழி நடத்துவதற்கு தகுதியான அடுத்த கேப்டன் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி இயன் சேப்பல் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக ஹெட் இத்தொடரில் வெளிப்படுத்தும் செயல்பாடு அவருடைய பயமற்ற அணுகுமுறையை காண்பிக்கிறது”

“பும்ராவின் வித்தியாசமான ஆக்சன், கூர்மையான வேகம், துல்லியம் ஆகியவற்றுக்கு எதிராக மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் டிராவிஸ் ஹெட் அவரை மற்றொரு சாதாரண பவுலராக நடத்துகிறார். அவருக்கு எதிராக அதிரடியாக விளையாடுவதால் ரன்கள் வருவது மட்டுமின்றி பும்ராவின் அச்சுறுத்தல் மற்றும் ரிதத்தையும் ஹெட் உடைக்கிறார்”

- Advertisement -

அடுத்த கேப்டன்:

“குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளை அடித்து நொறுக்கும் அவருடைய திறன் அற்புதமானது. அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களில் டிராவிஸ் மிகவும் முன்னேற்றமடைந்த பேட்ஸ்மேன் என்று நான் நம்புகிறேன். அதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் அடுத்த கேப்டனாகவும் வருவதற்கு அவர் தகுதியானவர். டிராவிஸ் ஹெட்டின் தற்போதைய ஃபார்ம் ஆஸ்திரேலியர்களின் வழக்கமான பேட்டிங் வழிக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது”

இதையும் படிங்க: டிராவிட்டை அப்படி பாத்ததில்லை.. அதான் ஹெல்ப் பண்ணுச்சு.. 2022 டி20 உ.கோ ஃபினிஷிங் பற்றி அஸ்வின் பேட்டி

“காபா டெஸ்ட் போட்டியில் அவர் பேட்டிங் செய்த போது என்னுடைய கண்களை தொலைக்காட்சியில் இருந்து எடுக்க முடியவில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல 3 வகையான கிரிக்கெட்டிலும் சமீபத்திய வருடங்களில் டிராவிஸ் ஹெட் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார். அதனால் அவர் ஆஸ்திரேலிய அணியை அடுத்ததாக தலைமை தாங்குவதற்கு தகுதியானவர் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement