சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்தியாவுக்காக விளையாடி கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளார். இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து விடைபெற்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகளை வென்று உலக சாதனை படைத்துள்ளார். முன்னதாக பந்து வீச்சில் நிறைய சாதனைகளை படைத்த அஸ்வின் பேட்டிங்கில் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு கொடுத்த ஃபினிஷிங் யாராலும் மறக்க முடியாது.
அப்போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை பாண்டியாவுடன் சேர்ந்து மீட்டெடுத்த விராட் கோலி வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பாண்டியா அவுட்டானதும் வந்த தினேஷ் கார்த்திக் சொதப்பியதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. அடுத்ததாக வந்த அஸ்வின் பாகிஸ்தானின் முகமது நவாஸ் வீசிய ஒயிட் போன்ற கடைசி பந்தை அடிக்காமல் விட்டது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.
மாஸ் ஃபினிஷிங்:
ஏனெனில் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட சூழ்நிலையில் வேறு பேட்ஸ்மேனாக இருந்தால் எப்படியாவது அதை அடிக்க பார்த்திருப்பார்கள். ஆனால் புத்திசாலித்தனமாக அதை அடிக்காமல் விட்ட அஸ்வின் ஒயிட் பெற்று அடுத்து வீசப்பட்ட எக்ஸ்ட்ரா பந்தை இறுதியில் தூக்கி அடித்து ஃபினிஷிங் கொடுத்தார். அந்த அற்புதமான ஃபினிஷிங் பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இங்கிலாந்தின் நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்டன் ஆகியோருடன் அஸ்வின் பகிர்ந்து பேசியது பின்வருமாறு.
“நான் என்ன செய்தேன் என்பதை உணரவில்லை. அப்போட்டியை முடித்துக் கொண்டு உடைமாற்றும் அறைக்கு சென்ற போது ராகுல் டிராவிட்டை அவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்ததில்லை. 2024 டி20 உலகக்கோப்பை வென்ற பின்பு அவரை அப்படி பார்த்தேன். அதற்கு முன்பாக அவ்வளவு மகிழ்ச்சியுடன் அவரை முதல் முறையாக பார்த்தேன்”
வித்யாச அஸ்வின்:
“அப்போது என்னிடம் வந்த அவர் இதனால் தான் உங்களை அணியில் வைத்துள்ளோம் என்று கூறினார். உண்மையில் அதை களத்தில் நான் உணரவில்லை. பந்தைப் பார்த்து அப்படியே விட்டேன். அதை எதிர்புறம் பார்த்த யார் இவர் பந்தை இப்படி விடுகிறார் என்ற ரியாக்ஷனை கையில் கொடுத்தார். தெருவோர (கல்லி) கிரிக்கெட் எனது வாழ்வில் பெரிய அங்கத்தை வகிக்கிறது”
இதையும் படிங்க: விராட் கோலி ஏன் இப்படி அவுட் ஆகுறாரு? பத்திரிகையாளரின் கேள்விக்கு – ரோஹித் சர்மா நச் பதில்
“எனது கேரியரின் இறுதியில் இப்போதும் கூட நண்பர்களுடன் தெருவோரத்தில் இன்னும் விளையாடுவேன். அது அந்தப் போட்டியில் மிகவும் முக்கிய பங்காற்றியது. ஏனெனில் பந்தை லெக் சைட் தவற விட்டதால் எங்களுக்கு ஃப்ரீ ஹிட் கிடைத்தது. அது அண்டர் ஆர்ம் பந்து போல காலை நோக்கி வந்ததால் உங்களால் அடிக்க முடியாது. எனவே அந்தப் பந்தை பார்த்ததும் இயற்கையாகவே என்னுடைய கால்களை நகர்த்தி அடிக்காமல் விட்டேன்” எனக் கூறினார்.



