உங்க சவகாசமே வேணாம்.. அதிரடியான முடிவை எடுத்த வங்கதேச கோச்.. ஜாம்பவான் ஆலன் டொனால்ட்

Allan Donald
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசம் 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளை பதிவு செய்து லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. ஆனால் அந்த அணி 2வது வெற்றியை பதிவு செய்த விதம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சிலோ மேத்யூஸ் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வந்த போது ஹெல்மெட் பழுதாக இருந்ததை பார்த்ததால் மாற்றுவதற்கு முயற்சித்தார்.

அப்போது அவர் வேண்டுமென்றே காலம் தாமதம் செய்வதாக தெரிவித்த வங்கதேச அணியினர் தங்களுக்கு அவுட் கொடுக்க வேண்டும் என்று நடுவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அதை சோதித்த நடுவர்கள் முந்தைய பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அடுத்த பேட்ஸ்மேன் அதற்கடுத்த 2 நிமிடத்திற்குள் வந்து பந்தை எதிர்கொள்ளவில்லை என்ற விதிமுறையை மீறியதால் மேத்யூஸ் அவுட் என்று அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

- Advertisement -

சவகாசமே வேணாம்:
அதனால் ஏமாற்றமடைந்த மேத்யூஸ் வங்கதேசம் மற்றும் ஷாகிப் மீதான மரியாதை போய் விட்டதாக விமர்சித்ததுடன் தாம் 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்த வீடியோ ஆதாரத்தை ஐசிசியிடம் சமர்ப்பித்து நியாயமும் கேட்டார். அந்த நிலையில் சாகிப் அல் ஹசன் செய்த இந்த நிகழ்வை பெவிலியனிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் களத்திற்கு சென்று “போதும் நிறுத்துங்கள் என்று திட்டலாம்” என நினைத்ததாக வங்கதேச அணியின் பவுலிங் பயிற்சியாளர் மற்றும் தென்னாபிரிக்க ஜாம்பவான் ஆலன் டொனால்ட் வெளிப்படையாக விமர்சித்தார்.

இதை சொல்வதற்காக அனைவரும் தம்மை பழைய காலத்து ஆள் என்று நினைத்தாலும் இது போன்ற மோசமான நிகழ்வுகளை கிரிக்கெட்டில் அனுமதிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் தன்னுடைய அணியின் கேப்டனையே வங்கதேச பயிற்சியாளர் வெளிப்படையாக விமர்சித்தது அந்நாட்டு வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் வங்கதேச அணியின் பவுலிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக ஆலன் டொனால்ட் முடிவு செய்துள்ளார். குறிப்பாக இந்த உலகக்கோப்பையுடன் அப்பதிவியிலிருந்து விலகுவதாக வங்கதேச வாரியத்திடம் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி வங்கதேச வாரிய அதிகாரி கூறியுள்ளது பின்வருமாறு. “ஆம் டொனால்ட் இந்த உலகக் கோப்பைக்கு பின் தொடர விரும்பவில்லை என்று அணி மீட்டிங்கில் எங்களிடம் தெரிவித்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அப்போ கப் நம்மகில்லையா? பாகிஸ்தான் வெளியேறியதை கொண்டாட முடியாமல் சோகத்தில் ஆழ்ந்த இந்திய ரசிகர்கள்

இதைப் பற்றி டொனால்ட் அவர்களிடம் கேட்ட போது சொன்னது பின்வருமாறு. “நான் வெளிப்படையாக விமர்சித்ததற்காக வங்கதேச வாரியம் விளக்கம் கேட்டால் பதிலளிக்க தயார். என்னை பொறுத்த வரை இதற்கான விளக்கம் செய்திகளில் வந்து விட்டது” என்று கூறினார். மொத்தத்தில் மேத்யூஸை மனசாட்சியின்றி அவுட் செய்த வங்கதேச அணியில் இருக்க விரும்பாமல் “உங்கள் சாகவாசம் போதும் என்ற வகையில் டொனால்ட் வெளியேறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement