- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதெல்லாம் போதாது.. அந்த கோட்டைத் தாண்டிய சிராஜுக்கு.. ரபாடா மாதிரி ஐசிசி தடை விதிக்கனும்.. குக் விமர்சனம்

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் கடைசி நாளில் வெற்றி பெற இந்தியாவுக்கு 135 ரன்களும் இங்கிலாந்துக்கு 6 விக்கெட்டுகளும் தேவைப்படுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முன்னதாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அந்தப் போட்டியில் பரபரப்பான தருணங்களும் அரங்கேறின.

குறிப்பாக 3வது நாள் முடிவில் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார். அதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் அவரிடம் கையை நீட்டி வாக்குவாதம் செய்தது பரபரப்பை உண்டாக்கியது. அதே போல நான்காவது நாள் காலையில் பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்தின் துவக்க வீரர் பென் டக்கெட்டை இந்தியாவின் சிராஜ் அவுட்டாக்கினார்.

- Advertisement -

இதெல்லாம் போதாது:

அந்த விக்கெட்டை பென் டக்கெட் முகத்துக்கு நேராக சென்று சிராஜ் வெறித்தனமாக 3 முறை கத்திக் கொண்டாடினார். மறுபுறம் ஏமாற்றத்துடன் சென்ற பென் டக்கெட் தோளில் சிராஜ் தோள் லேசாக உரசியது. அதை கவனித்த நடுவர் இப்படியெல்லாம் கொண்டாடக்கூடாது என்ற வகையில் சொல்லி சிராஜை லேசாக எச்சரித்து விட்டார்.

அதற்காக ஐசிசி சிராஜ்க்கு 15% போட்டி சம்பளம் அபராதம் மற்றும் ஒரு கருப்பு புள்ளியை தண்டனையாக வழங்கியுள்ளது. இந்நிலையில் வரம்பை மீறி கொண்டாடிய சிராஜுக்கு ஐசிசி பெரிய தண்டனையை வழங்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2020 போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டை தென்னாப்பிரிக்காவின் ரபாடா போல்ட்டாக்கினார்.

- Advertisement -

குக் கோரிக்கை:

அப்போது ரூட் முகத்துக்கு முன் சிராஜை விட ரபாடா அதிக வெறித்தனமாக விக்கெட்டை கொண்டாடியதால் ரபாடாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதே போல இனிமேல் யாரிடமும் இப்படி கொண்டாடாத அளவுக்கு சிராஜுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட குக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்போது யாரை குற்றம் சொல்வது? அவர் என்ன செய்கிறார் என்பதை டக்கெட் சரியாக அறிந்தாரா?”

இதையும் படிங்க: 600 ரன்ஸ்.. டக்கெட் ஸ்லெட்ஜில் விழுந்த கில்.. தோனி, கோலியுமா இல்லாம 2ம் கட்டானாக இருக்காதீங்க.. மஞ்ரேக்கர் சாடல்

“நீங்கள் இனிமேல் மீண்டும் யாருடைய முகத்திலும் அப்படி கத்தக்கூடாது. அது தவறு என்று என் முழு மனதுடன் சொல்கிறேன். எதுவாக இருந்தாலும் கோட்டைத் தாண்டி உடலுடன் தொடர்பு இருக்கக்கூடாது. விக்கெட்டை எடுக்கும் நீங்கள் கொண்டாடுங்கள். ஆனால் 3 அங்குலத்திலிருந்து கண்ணை பார்த்து பேட்ஸ்மேன் முகத்தில் கத்தத் தேவையில்லை. இதனுடைய பின்விளைவு அதிகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறினார். அதே சமயம் கில் – கிராவ்லி மோதல் வரம்புக்கு உட்பட்டது என்று குக் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -