லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இந்தியாவும் 387 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்தது. அதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்தை 192 ரன்களுக்கு இந்தியா சுருட்டி வீசியது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியாக 193 ரன்களை துரத்தும் இந்தியா 4வது நாள் முடிவில் 58/4 என தடுமாறி வருகிறது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 0, கருண் நாயர் 14, கேப்டன் கில் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் களத்தில் ராகுல் 33* ரன்களுடன் போராடி வருகிறார்.
600 ரன்ஸ் ஸ்லெட்ஜ்:
முன்னதாக இத்தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது சுப்மன் கில்லை பலரும் விமர்சித்தனர். ஆனால் முதல் போட்டியில் சதத்தை அடித்து 2வது போட்டியில் 430 ரன்கள் குவித்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்து பல சாதனைகள் புரிந்து பதிலடி கொடுத்தார். இருப்பினும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 16 ரன்களில் அவுட்டான அவர் 2வது இன்னிங்ஸில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு “600 ரன்கள் அடித்ததும் இவர் இத்தொடரை முடித்து விட்டார். இந்தப் பையனுக்கு 600 ரன்கள் போதும்” என்று சத்தமாக சொல்லி கில்லை ஸ்லெட்ஜிங் செய்தார். அடுத்த சில ஓவரிலேயே கில் 14 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இந்நிலையில் சுப்மன் கில் ஒன்று தோனி போல கூலாக செயல்பட வேண்டும் அல்லது விராட் கோலி போல நெருப்பாக பேட்டிங் செய்ய வேண்டுமென்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
2ம் கெட்டான் வேணாம்:
அதை விட்டு விட்டு இரண்டும் கட்டானாக இருந்தால் இப்படி எதிரணிகள் ஸ்லெட்ஜ் செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நேற்று மாலை திடீரென தற்காலிகமாக தோற்றமளித்த சுப்மன் கில்லுக்கு வெள்ளைக்கோட்டில் இங்கிலாந்தின் பகைமை நிறைந்த தொடர்பு இருந்தது. விராட் கோலி கோபப்படும் போது இன்னும் நன்றாக செயல்பட்டுள்ளார்”
இதையும் படிங்க: 12 மாதத்தில் 2வது முறை.. அவ்வளவு வெறித்தனமா? லார்ட்ஸில் விதிமுறை மீறிய சிராஜ்க்கு ஐசிசி 2 தண்டனை
“தோனி அதற்கு நேர்மாறானவர். எனவே ஒரு பேட்ஸ்மேனாக நம்மிடமிருந்து நல்ல செயல்பாடுகளை கோபம் கொண்டு வருகிறதா அல்லது அமைதி தருகிறதா என்பதை கில் தீர்மானிக்க வேண்டும்” எனக் கூறினார். இதைத்தொடர்ந்து கடைசி நாளில் 135 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி பெற முயற்சிக்க உள்ளது.



