அந்த சின்ன தப்பை செய்யாம.. மறுபடியும் இந்திய அணியை இங்கிலாந்து தோற்கடிக்கும்.. அலெஸ்டர் குக் நம்பிக்கை

Alastair Cook 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பரபரப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. ஏனெனில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதற்கு விசாகப்பட்டினம் நகரில் நடந்த இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தக்க பதிலடி கொடுத்து 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

மறுபுறம் 2வது போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 399 ரன்கள் இலக்கை 70 ஓவர்களுக்குள் சேசிங் செய்து முடிப்போம் என்ற சொன்ன இங்கிலாந்து சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் விளையாடாமல் ஏமாற்ற தோல்வியை சந்தித்தது. எனவே சொந்த மண்ணில் எங்களை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்பதை காண்பித்துள்ள இந்தியா அடுத்து வரும் போட்டிகளிலும் வென்று கோப்பையை முத்தமிடும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

சின்ன தப்பு:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய இலக்கை சேசிங் செய்யும் போது ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் சதமடிக்காமல் போனால் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். அந்த வகையில் முதல் போட்டியில் முக்கிய நேரத்தில் ஓலி போப் பெரிய சதமடித்து 196 ரன்கள் குவித்தது போல இரண்டாவது போட்டியில் எந்த பேட்ஸ்மேனும் சதம் அடிக்காததே இங்கிலாந்துக்கு தோல்வியை தோல்வியை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே அந்த சிறிய தவறை திருத்திக்கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் இந்தியாவை மீண்டும் இங்கிலாந்து தோற்கடிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி டிஎன்டி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அனைத்தையும் விட இந்த வெற்றியால் இந்தியா நிம்மதி அடைந்திருக்கும். முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த அவர்கள் கடுமையான அழுத்தத்தின் கீழ் இருந்தனர்”

- Advertisement -

“இங்கிலாந்து தங்களுடைய எந்த பேட்ஸ்மேனும் போட்டியை வெற்றி பெறும் அளவுக்கு பெரிய இன்னிங்ஸ் விளையாடாததால் தோல்வியை சந்தித்தது. இதை அவர்கள் மீண்டும் திரும்பிப் பார்த்து சரி செய்ய வேண்டும். குறிப்பாக 30 – 70 ரன்கள் அடிப்பது டெஸ்ட் போட்டியில் வெற்றியை கொடுக்காது. இப்போட்டியில் சதமடிக்காமல் வெற்றியை நெருங்கி தவற விட்ட இங்கிலாந்து அதற்காக ஏமாற்றத்தை சந்தித்திருக்கும்”

இதையும் படிங்க: இந்திய அணியில் இருக்கும் அந்த பின்னடைவை பயன்படுத்தி இங்கிலாந்து ஜெயிக்கும்.. மைக்கேல் ஆதர்டன் பேட்டி

“எனவே நிச்சயமாக இந்த போட்டியில் இங்கிலாந்து எடுத்து செல்வதற்கு பாடங்கள் இருந்தது. அதை பயன்படுத்தி இங்கிலாந்து விளையாடும் என்பதால் இந்த இந்திய அணி இத்தொடரில் மீண்டும் தோல்வியை சந்திக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement