இந்திய அணியில் இருக்கும் அந்த பின்னடைவை பயன்படுத்தி இங்கிலாந்து ஜெயிக்கும்.. மைக்கேல் ஆதர்டன் பேட்டி

Micheal Atherton
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக ஹைதராபாத் நகரில் நடந்த அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியாவை இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 231 ரன்களை சேசிங் செய்ய விடாமல் இங்கிலாந்து மகத்தான வெற்றி பெற்றது.

அதனால் பின்னடைவை சந்தித்த இந்திய அணி விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் சுதாரிப்புடன் செயல்பட்டு 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ள இந்தியா சொந்த மண்ணில் எங்களை அவ்வளவு சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை காண்பித்துள்ளது.

- Advertisement -

இதெற்கெல்லாம் அசரமட்டோம்:
இந்நிலையில் இந்த தோல்விக்காக இங்கிலாந்து பின்வாங்காது என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் 3வது போட்டியில் விளையாடுவார்களா என்பது உறுதியாக தெரியாத நிலையில் ரவீந்திர ஜடேஜா, ஷமி காயத்தால் விளையாடுவது சந்தேகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே அந்த பின்னடைவை பயன்படுத்தி இந்திய அணியை தோற்கடித்து இத்தொடரை இங்கிலாந்து வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் கோலி, ராகுல் போன்ற முக்கியமான வீரர்கள் இல்லை. ராகுல் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இருப்பினும் ரவீந்திர ஜடேஜா இத்தொடரின் ஏதோ ஒரு போட்டியில் விளையாட வருவார்”

- Advertisement -

“ஷமியை பற்றி தெரியாது. அவர் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார் என்று நினைக்கிறேன். எனவே இங்கிலாந்து இத்தொடரை வெல்வதற்கான வாய்ப்புள்ளதாக கருதும். குறிப்பாக இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் அவர்கள் தலா 20 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பிருந்ததை போல தற்போதைய இங்கிலாந்து பேட்டிங் கிடையாது. அதில் இளம் மற்றும் அனுபவமற்ற வீரர்கள் இருக்கின்றனர்”

இதையும் படிங்க: மர்ம நபர்களால் கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்.. பணம், போன், பேக் உள்ளிட்ட பொருள் திருட்டு – பரபரப்பு சம்பவம்

“எனவே இங்கிலாந்து ரன்கள் அடித்தால் வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வெற்றி பெறுவதற்கு கடினமான இடமாகும். கடந்த பத்து வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் இந்தியாவை கடைசியாக இங்கிலாந்து தோற்கடித்தது. எனவே 2 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து மனதை விட்டிருக்கும் என்று நான் கருதவில்லை. இப்போதும் அவர்கள் போட்டியில் இருக்கின்றனர். 1 – 1 என்ற கணக்கில் உள்ள இந்த தொடரில் இனிமேல் தான் அனைத்தும் விளையாடப்படும்” என்று கூறினார்.

Advertisement