- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தப்பு பண்ண அப்புறமும் இதை சொன்னாரு.. ரோஹித் மாதிரி கேப்டனை பாத்ததில்ல.. ஆகாஷ் தீப் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். அதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பையில் சிறப்பாக விளையாடிய அவர் தற்போது நடைபெற்று வரும் வங்கதேச டெஸ்ட் தொடரில் ஷமிக்கு பதிலாக வாய்ப்பு பெற்றுள்ளார். அந்த வாய்ப்பில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர் 2வது போட்டியிலும் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் இதற்கு முன் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடிய தாம் ரோஹித் சர்மா போன்ற கேப்டனை பார்த்ததில்லை என ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர் இளம் வீரர்களிடம் மிகவும் நட்பாக நடந்து கொள்வதாக ஆகாஷ் தீப் கூறியுள்ளார். அத்துடன் நோ-பால் போட்டு தவறாக பந்து வீசிய போதும் ரோஹித் சர்மா தமக்கு ஆதரவு கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

கேப்டன் ரோஹித் சர்மா:

எனவே அவருடைய தலைமையில் விளையாடும் இளம் வீரர்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் ஆகாஷ் தீப் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோஹித் பையா தலைமையில் விளையாடுவது நல்ல நேரம் மற்றும் அதிர்ஷ்டம் என்று நான் எப்போதும் சொல்வேன். அவருடைய தலைமையில் விளையாடுவதற்கு என்னை நானே அதிர்ஷ்டம் செய்தவனாக கருதுகிறேன்”

“அவர் வித்தியாசமான கேப்டன். அவரைப் போன்ற கேப்டனை நான் பார்த்ததில்லை. நான் விளையாடியதில் அவர் சிறந்த கேப்டன். ஏனெனில் அவர் மிகவும் கூலான பொறுமையான நபர். என்னிடம் மட்டுமின்றி அவர் ஒவ்வொரு வீரரிடமும் விஷயங்களை மிகவும் எளிமையாக பின்பற்றுகிறார். ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர அந்தஸ்தை கொண்டவர் இளம் வீரர்களிடம் நண்பன் மற்றும் சகோதரரை போல் பழகுவதை நீங்கள் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்”

- Advertisement -

ரோஹித் சர்மாவின் ஆதரவு:

“இங்கிலாந்து தொடரில் நான் நோபால் பந்தை வீசினேன். அப்போதும் எனக்கு ரோஹித் பையா ஆதரவு கொடுத்தார். நோ-பால் வீசியதை விட்டுவிட்டு முன்னோக்கி வாருங்கள் என்று சொன்னார். ஒரு பவுலராக நீங்கள் அது போன்ற தருணங்களை இப்போது மறக்க மாட்டீர்கள்” என்று கூறினார். இதே போல ரோஹித் சர்மா தங்களிடம் நட்பாக நடந்து கொள்வதாக சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் ஆகியோரும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க: கோலியும் அவரும் ஒன்னா? ரிஷப் பண்ட் – தோனி ஆகியோரில் சிறந்த கீப்பர் யார்? பசித் அலி பதில்

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று எச்சரித்த வங்கதேசத்துக்கு ஆரம்பத்திலேயே இந்தியா பதிலடி கொடுத்தது. அடுத்த போட்டி வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -