கோலியும் அவரும் ஒன்னா? ரிஷப் பண்ட் – தோனி ஆகியோரில் சிறந்த கீப்பர் யார்? பசித் அலி பதில்

Basit Ali 2
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய ரிஷப் பண்ட் தன்னுடைய 6வது சதத்தை பதிவு செய்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய வெளிநாட்டு மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையையும் அவர் ஏற்கனவே படைத்துள்ளார். அதனால் தோனியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் தான் சிறந்த விக்கெட் சூப்பர் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இது பற்றி முன்னாள் பாகிஸ்தான் கீப்பர் பசித் அலி தம்முடைய கருத்தை தெரிவித்தது பின்வருமாறு.

- Advertisement -

சிறந்த கீப்பர் யார்:

“முதலில் இது போன்ற விஷயங்கள் எப்படி உங்களுடைய மனதில் வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ரிஷப் பண்ட் தோனியை விட சிறந்தவரா? மன்னிக்கவும். தோனி ஒரு லீடர். அவர் இந்தியாவுக்காக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்றவர். ரிஷப் பண்ட் தற்போது அசத்துகிறார். அவரை விளையாட விடுங்கள். இங்கே நான் 2 எடுத்துக்காட்டுகளை கொடுக்க விரும்புகிறேன்”

“அதை வைத்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சுப்மன் கில்லை விராட் கோலியுடன் ஒப்பிடுவீர்களா? பெரும்பாலானவர்கள் வேண்டாம் என்று சொல்வார்கள். தற்போது தோனி ஐபிஎல் தவிர்த்து அனைத்து கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் இப்போதும் மைதானத்திற்கு வரும் போது ரசிகர்களிடம் கிடைக்கும் கைதட்டல்கள் தான் தோனியை பற்றிய தரத்தையும் மதிப்பையும் சொல்லும்”

- Advertisement -

ஒப்பீடுகள் வேண்டாமே:

“அதே மைதானத்தில் ரிஷப் பண்ட்டும் வருவார். எனவே செயல்பாடுகளைத் தாண்டி அந்த கைதட்டல்களை வைத்து தான் நான் சிறந்தவரை முடிவெடுப்பேன். என்னைப் பொறுத்த வரை ரிசப் பண்ட் ஓய்வு பெற்ற பின் வேண்டுமானால் இப்படி ஒப்பிடலாம். ஆனால் இப்போதே ஒப்பீடுகள் வேண்டாம். கீப்பர் என்பதைத் தாண்டி தோனி ஒரு லீடர்”

இதையும் படிங்க: நல்லவேளை இந்தியராக இருப்பதால் அஸ்வின் தப்பிச்சாரு.. இங்கிலாந்தில் இதை செஞ்சுருப்பாங்க.. மான்டி பனேசர்

“அசாருதீனுக்கு பின் சௌரவ் கங்குலி வீரர்களை உருவாக்கினார். கங்குலி சென்ற பின் தோனி வீரர்களை உருவாக்கினார். இந்தியாவில் இந்த சிஸ்டம் சிறப்பாக செல்கிறது. ஆனால் பாகிஸ்தான் கேப்டன்கள் தங்களுடைய இடத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக மற்ற வீரர்களை வர விடுவதில்லை. இதுவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உள்ள வித்தியாசம். கசப்பாக இருந்தாலும் இதுவே உண்மையாகும்” என்று கூறினார்.

Advertisement