அறிமுக போட்டியிலே அசத்திய ஆகாஷ் தீப்பிற்கு நிகழ்ந்த அநியாயம்.. என்னப்பா இதெல்லாம் – நடந்தது என்ன?

Akash-Deep
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ராஞ்சி நகரில் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதோடு இந்த தொடரையும் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் அந்த போட்டியின் முடிவில் கைப்பற்றி இருந்தது.

அந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா பணிச்சுமை காரணமாக ஓய்வு எடுத்துக் கொண்டதால் அவருக்கு பதிலாக 27 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இந்திய அணிக்காக அறிமுகமாகியிருந்தார்.

- Advertisement -

அப்படி தான் அறிமுகமான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 19 ஓவர்களை வீசிய அவர் 83 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் டாப் 3 வீரர்களையும் அடுத்தடுத்து அவர் வீழ்த்தி இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்திருந்தார்.

மேலும் இரண்டாவது இன்னிங்சின் போது அவருக்கு பந்துவீசும் அவசியம் ஏற்படவில்லை. இப்படி நடைபெற்று முடிந்த அந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த ஆகாஷ் தீப்பிற்கு தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் மீண்டும் பும்ரா திரும்பியதால் ஆகாஷ் தீப் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தீப் இப்படி அணியில் இருந்து கழட்டி விடப்பட்டது அவருக்கு அளிக்கப்பட்ட அநியாயம் என்று ரசிகர்கள் சிலர் இந்த தவறை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : காவ்யா மாறன் இல்ல.. ஹைதராபாத் கேப்டனாக ஐடென் மார்க்ரம் நீக்கப்பட காரணம் அவர் தான்.. ஏபிடி அதிருப்தி

ஏனெனில் அறிமுகப் போட்டியிலே அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு மேலும் ஒரு போட்டியில் தொடர்ச்சியான வாய்ப்பினை வழங்கி இருக்க வேண்டும் என்றும் அந்த வகையில் அனுபவ வீரராக முகமது சிராஜிக்கு ஐந்தாவது போட்டியில் ஓய்வை வழங்கிவிட்டு இளம் வீரரான அவரை அணியில் தொடர வைத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement