4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம் – இந்த தொடர் எல்லாருக்கும் லக் தான்

IND-vs-ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் சற்றுமுன் துவங்கியது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். மேலும் இங்கிலாந்து அணிக்கான பிளேயிங் லெவனை அவர்கள் நேற்றே அறிவித்திருந்ததால் அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

- Advertisement -

அதனை தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா : இந்த போட்டியில் நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய விரும்புவதாகவும் ஏனெனில் பிட்ச் வறட்சியாக காணப்படுவதால் முதலில் பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் இந்த மைதானத்தின் தன்மையே இப்படித்தான் என்றும் கூறியிருந்தார்.

அதோடு கடைசியாக இங்கு விளையாடிய 2 போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இம்முறையும் நன்றாக செயல்படும் என்றும் தெரிவித்திருந்த அவர் இந்த போட்டியில் ஒரு மாற்றம் இருப்பதாக கூறி ஆகாஷ் தீப் இந்திய அணிக்காக அறிமுகமாகிறார் என்று தெரிவித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம்தான் என்பது உறுதியாகியது. அந்த வகையில் இந்த நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக 27 வயதான பெங்காலை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து இந்திய அணியில் வேற எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : கோல்டன் சான்ஸ் கிடைச்சுருக்கு.. இதையும் விட்டா அவ்ளோ தான்.. இளம் வீரரை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) ரஜத் பட்டிதார், 5) சர்பராஸ் கான், 6) ரவீந்திர ஜடேஜா, 7) துருவ் ஜுரேல், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) குல்தீப் யாதவ், 10) ஆகாஷ் தீப், 11) முகமது சிராஜ்.

Advertisement