கோல்டன் சான்ஸ் கிடைச்சுருக்கு.. இதையும் விட்டா அவ்ளோ தான்.. இளம் வீரரை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 5
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இது தொடரில் இதுவரை நடந்த முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது.

ஆனால் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் ஆகிய இளம் வீரர்கள் சீனியர்கள் இல்லாத குறையைப் போக்கும் அளவுக்கு சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர். இருப்பினும் இரண்டாவது போட்டியில் அறிமுகமான ரஜத் படிடார் மட்டும் சுமாராக விளையாடி வருவது இந்திய அணிக்கு பின்னடைவாகவும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.

- Advertisement -

கோல்டன் சான்ஸ்:
ஏனெனில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மொத்தம் 46 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்கும் நான்காவது போட்டியில் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் மீண்டும் காயத்தால் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் மீண்டும் அவருக்கு இந்திய விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்க உள்ளது. இந்நிலையில் கேஎல் ராகுல் காயத்தால் விலகியது ரஜத் படிடாருக்கு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். எனவே அதை அதை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் வருங்காலத்தில் வாய்ப்பு கிடைப்பது கடினமாகி விடும் என்று எச்சரிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதலில் கேஎல் ராகுல் ஃபிட்டாகி மூன்று மற்றும் நான்காவது போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் ஐந்தாவது போட்டிக்கு தான் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் உறுதியாக தெரியவில்லை. எனவே கேஎல் ராகுல் விளையாடாததால் இந்திய 11 பேர் அணியில் பேட்டிங் துறையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை”

இதையும் படிங்க: நீங்க மட்டும் ஸ்பெஷலா.. உங்களுக்கு மட்டும் தனி ரூல்ஸா? மதிக்காத வீரரை விளாசிய இர்பான் பதான்

“அதனால் இது ரஜத் படிடாருக்கு பொன்னான வாய்ப்பாகும். இதை பயன்படுத்தி அவர் ரன்கள் அடிக்க வேண்டும். இல்லையேல் அது அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். அதே போல அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகிய நான்கு ஸ்பின்னர்கள் அணியில் இருப்பார்கள். அத்துடன் முகமது சிராஜ் இருக்க வேண்டும். ராஞ்சி மைதானத்தில் இந்த கலவையை விட வேறு எதுவும் வித்தியாசத்தை ஏற்படுத்தாது. மற்ற படி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி மீண்டும் விளையாடும்” என்று கூறினார்.

Advertisement