நீங்க மட்டும் ஸ்பெஷலா.. உங்களுக்கு மட்டும் தனி ரூல்ஸா? மதிக்காத வீரரை விளாசிய இர்பான் பதான்

Irfan Pathan
- Advertisement -

இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் சமீப காலங்களாகவே ரஞ்சிக் கோப்பையை புறக்கணிப்பது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஒரு காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய நேரம் போக சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதே போல ஃபார்மை இழந்து தடுமாறிய போது சௌரவ் கங்குலி, லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இந்திய அணியில் கம்பேக் கொடுத்ததை மறக்க முடியாது.

ஆனால் இப்போதுள்ள வீரர்கள் ரஞ்சிக் கோப்பையை ஒரு பொருட்டாகவே பார்க்காமல் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். குறிப்பாக கடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் விலகிய இசான் கிசான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தயாராக இருக்குமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

தனி ரூல்ஸா:
ஆனால் அதை செய்யாத இஷான் கிசான் பரோடாவுக்கு சென்று பாண்டியா சகோதரர்களுடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கு தயாராவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அப்போது சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ள எந்த வீரராக இருந்தாலும் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவது அவசியம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடுமையாக எச்சரித்திருந்தார்.

அந்த சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் காயத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூருவில் இருக்கும் என்சிஏவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஒரு வாரத்திற்கு பின் நிகழ்த்தப்பட்ட சோதனையில் காயம் குணமடைந்தது தெரிய வந்தது. எனவே அவர் பரோடாவுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பையின் காலிறுதி போட்டியில் மும்பை பணிக்காக விளையாட ஃபிட்டாக இருப்பதாக என்சிஏ சார்பில் பிசிசிஐக்கு மெயில் அனுப்பப்பட்டது.

- Advertisement -

ஆனால் தமக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ரஞ்சிக் கோப்பை காலிறுதிப் போட்டியில் விளையாட முடியாது என்று சொல்லி ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். இதனால் அதிருத்தியடைந்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உங்களுக்கு மட்டும் தனி விதிமுறையா? என்ற வகையில் ஸ்ரேயாஸ் ஐயரை ட்விட்டரில் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: இதோட உன் கரியர் முடிஞ்சிச்சுன்னு கம்பீர் என்னை எச்சரித்தார்.. ஓய்வுக்கு பிறகு சம்பவத்தை பகிர்ந்த – மனோஜ் திவாரி

இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “உடலை பார்த்துக் கொள்கிறோம் என்ற பெயரில் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடக்கூடாது என்று சொல்ல வெவ்வேறு வீரர்களுக்கு வெவ்வேறு விதிமுறைகள் உள்ளதா” என்ற கேள்வியுடன் விமர்சித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் தயாராக துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement