இவர் இருக்கும்போது ஹார்டிக் பாண்டியா எதற்கு ? இவரே போதும் பாத்துப்பாரு – அஜித் அகார்கர் ஓபன்டாக்

agarkar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் இன்னும் சில தினங்களில் முன்னணி அணிகள் மோதும் முக்கிய போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன. குறிப்பாக 24-ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

shami

- Advertisement -

அதனை தொடர்ந்து அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடனான பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளதால் நிச்சயம் சிறப்பாக விளையாடும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரான ஹார்டிக் பாண்டியாவின் இடம் மட்டுமே தற்போது பலராலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

ஏனெனில் பந்துவீசாமல் பாண்டியா அணியில் இருப்பது கடினம் என்று கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பதிலாக விளையாடும் மாற்று வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி பாண்டியா பந்து வீசாத பட்சத்தில் ஜடேஜா ஆல்-ரவுண்டராக விளையாட அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.

Jadeja 2

மேலும் அவர் விளையாடும் பட்சத்தில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று ஸ்பின்னர்களுடன் இந்திய அணி விளையாடும் சௌகரியம் கிடைக்கும். ஸ்பின்னர்களாக வருண் சக்கரவர்த்தி மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் விளையாடுவார்கள். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, ஷமி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரும் விளையாடலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியின் வார்த்தையால் குழப்பத்தில் இந்திய வீரர்கள் – என்ன நடக்கப்போகுதோ ?

என்னை பொறுத்தவரை பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் ஆறாவது பேட்ஸ்மேன் என்பது தேவையில்லை. இதன் காரணமாக பாண்டியாவுக்கு பதிலாக ஜடேஜா அணியில் களமிறங்கி விளையாடலாம். ஜடேஜா பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் பினிஷர் ரோலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று அஜித் அகார்கர் குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement