விராட் கோலியின் வார்த்தையால் குழப்பத்தில் இந்திய வீரர்கள் – என்ன நடக்கப்போகுதோ ?

Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தற்போது பயிற்சியினை துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் குறித்த பல்வேறு விவாதங்கள் சமூகவலைதளத்தில் எழுந்து வந்தன. அதுமட்டுமின்றி இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் அணியின் தேர்வு சற்று கடினமாகவே இருந்தது.

IND

- Advertisement -

இருப்பினும் முக்கிய வீரர்களை வைத்து தற்போது மிகவும் பலம் வாய்ந்த அணியை உலக கோப்பைக்கு பிசிசிஐ அனுப்பி வைத்துள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது அசுர பலத்துடன் இருப்பதாலும், வீரர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் விளையாடுவதால் பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே ஐபிஎல் தொடர் முடியும் போது தான் ஓப்பனராக விளையாடுவதில் கோலி சம்மதம் தெரிவித்து விட்டார் என்று இஷான் கிஷன் கூறிய நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி ரோகித் சர்மாவுடன் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக தற்போது இஷான் கிஷன் ஓப்பனராக விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. கோலியின் இந்த கருத்தால் இந்திய அணியின் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

practice

ஏனெனில் ராகுல் துவக்க வீரராக விளையாடும் பட்சத்தில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் முதல் மூன்று வீரர்களாக ரோஹித், ராகுல், கோலி ஆகியோர் நிச்சயம் விளையாடுவார்கள். அதன்பிறகு 5 ஆவது வீரராக ரிஷப் பண்ட், 6-வது வீரராக ஹார்டிக் பாண்டியா, 7-ஆவது வீரராக ஜடேஜாவும் விளையாடுவார்கள் என்பதனால் நான்காவது இடம் மட்டுமே தற்போது காலியாக உள்ளது. அந்த இடத்தில் இந்த இருவரில் யார் விளையாடுவார்கள் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருந்தாலும் இந்திய அணியின் இந்த வீக்னஸை கவனிச்சீங்களா ? – ரொம்ப கஷ்டம் தான்

ஒருவேளை இஷான் கிஷன் துவக்க வீரராக விளையாடினால் ராகுல் நான்காம் இடத்திற்கு வருவார் என்பதால் சூர்யகுமார் யாதவ் வெளியேற்றப்படுவார். இப்படி சிக்கல்கள் நிறைந்ததாக உள்ள இந்த பிரச்சினை எப்படி முடிவுக்கு வரும் என்பது பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் தான் தெரியவரும். தற்போதுள்ள நிலைமையில் இந்திய அணியின் நான்காவது இடத்தில் மட்டுமே பெரிய போராட்டத்தை சந்திக்கும் என்பது உறுதி.

Advertisement