இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருந்தாலும் இந்திய அணியின் இந்த வீக்னஸை கவனிச்சீங்களா ? – ரொம்ப கஷ்டம் தான்

IND
- Advertisement -

ஐசிசி நடத்தும் 7-வது டி20 உலக கோப்பை தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது ஓமன் நாட்டில் நடைபெற்று வர ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னணி அணிகளின் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணியும் கலந்துகொண்டு தற்போது விளையாடி வருகிறது. 24-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணி ஆனது அதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டது.

practice

- Advertisement -

அதன்படி நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி 19 ஓவர்களில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 189 ரன்களை அபாரமாக சேஸிங் செய்து அசத்தி இருந்தாலும் இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்களின் செயல்பாட்டில் உள்ள ஒரு வீக்னெஸ் தற்போது பிசிசிஐ இடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விடயம் யாதெனில் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பவுலிங்கில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது.

குறிப்பாக இந்திய அணியை வழிநடத்திச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் புவனேஸ்வர் குமார் விக்கெட் ஏதும் எடுக்காமல் 4 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அதேபோன்று ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் நான்கு ஓவர்களுக்கு 40 ரன்களையும், ராகுல் சாஹர் நான்கு ஓவர்களுக்கு 43 ரன்களையும் விட்டு கொடுத்து மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்தினர்.

shami

இந்திய அணி சார்பாக நேற்றைய பந்துவீச்சில் அஷ்வின் 4 ஓவர்களில் 23 ரன்களையும், பும்ரா 4 ஓவர்களில் 26 ரன்களையும் கொடுத்து ஓரளவு சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். அவர்களை தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் மிகவும் மோசமாக பந்து வீசியதால் இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கப் போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது. இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளதால் நிச்சயம் அவரின் பந்துவீச்சில் எதிரணி வீரர்கள் ரன் குவிக்க தடுமாறுவார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : உலகக்கோப்பையில் ரோஹித்துடன் ஓப்பனராக ஆடப்போவது இவர்தான். இஷான் கிஷன் இல்ல – விராட் கோலி

அதேபோல் பும்ரா பந்து வீச்சிலும் ரன் வருவது கடினம். மேலும் இரண்டு பவுலர்கள் இந்திய அணிக்கு ஸ்ட்ராங்காக அமைந்தால் மட்டுமே இந்திய அணியால் எதிரணிகளை சுருட்ட முடியும். இதன் காரணமாக தற்போது மேலும் சில ஆப்ஷன்களை இந்திய அணி பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும் நம் அணியில் ஜடேஜா, ஷர்துல் தாகூர் போன்றவர்கள் இன்னும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் இந்திய அணி பவுலிங் காம்பினேஷனில் இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement