உலககோப்பை இந்திய அணியில் இவரே துருப்பு சீட்டாக இருப்பார் – அஜித் அகார்கர் நம்பிக்கை

Ajit-Agarkar
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரானது துவங்க இன்னும் சில நாட்களே உள்ள வேளையில் தற்போது இந்த தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

அதனை தொடர்ந்து உலக கோப்பை பயிற்சி போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற இருப்பதினால் நிச்சயம் இந்திய அணியே கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள் என்பது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தான் இருப்பார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் ஐபிஎல் போட்டிகளில் அவருடன் நிறைய நேரத்தை செலவு செய்துள்ளேன். அவர் ஒரு சிறப்பான திறன் கொண்டவர். ஒவ்வொரு வீரருக்கும் நாம் நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அந்தவகையில் இந்திய அணி தற்போது குல்தீப் யாதவை ஆதரித்து அவரிடம் இருந்து நல்ல செயல்பாட்டை வெளிக்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : 2023 உ.கோ முன் எதிரணிக்கு பலத்தை காட்ட விரும்பல.. அதான் அவரை ஒளிச்சு வைக்கிறோம் – ரோஹித் சர்மாவின் ப்ளான் கருத்து

அந்த வகையில் உலகக் கோப்பை தொடரிலும் குல்தீப் யாதவ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் அகார்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியில் தற்போது முதன்மை சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் மட்டுமே இருப்பதால் உலககோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement