30 வீரர்கள்.. விராட், ரோஹித்திடம் பேசப்போகும் அஜித் அகர்கர்.. 2024 டி20 உ.கோ பற்றி வெளியான தகவல்

Ajit Agarkar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி தொடர்களில் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் சுமாராக செயல்பட்டு ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தாரை வார்த்தது. அதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்த நிலையில் அடுத்ததாக 2024 புத்தாண்டில் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை இந்தியா துவங்கியுள்ளது.

அந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா என்பது கடந்த சில மாதங்களாகவே கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, கேஎல் ராகுல், புவனேஸ்வர் குமார் தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

பேச்சுவார்த்தையில் அகர்கர்:
அதனால் அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் பிசிசிஐ களமிறக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது. அதற்கேற்றார் போல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா வைத்திருந்த கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் அடுத்ததாக நடைபெறும் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவருமே காயமடைந்துள்ளதால் கேப்டனாக யார் செயல்படுவது என்பது பற்றி ராகுல் டிராவிட்டிடம் அவர்கள் விவாதிக்க உள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

அத்துடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடம் டி20 உலகக் கோப்பையில் விளையாடுகிறார்களா என்பது பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் போது அவர்களையும் சேர்த்து 25 – 30 வீரர்களை கண்காணித்து நல்ல ஃபார்மில் இருப்பவர்களை மட்டுமே 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யும் முடிவை பரிசீலிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: உலகக் கோப்பை மாதிரி இருக்கும்.. 2வது போட்டிக்கு முன் இந்தியாவை எச்சரித்த டீன் எல்கர்

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தற்போது ஃபிட்டாக இல்லை. எனவே ஆப்கானிஸ்தான் தொடர் நமக்கு எதற்குமே தீர்வாகவும் பதிலாகவும் அமையப்போவதில்லை. அதனால் ஐபிஎல் தொடரின் முதல் மாதத்தில் வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட உள்ளது. மேலும் ஐபிஎல் அணி நிர்வாகங்களிடம் காயமடையாத வரை ஒரு வீரரின் பணிச்சுமை பற்றி பிசிசிஐ பேச முடியாது” என்று கூறினார்.

Advertisement