உலகக் கோப்பை மாதிரி இருக்கும்.. 2வது போட்டிக்கு முன் இந்தியாவை எச்சரித்த டீன் எல்கர்

Dean Elgar Press 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது. அதனால் 1992 முதல் இதுவரை தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவிடம் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் மிகப்பெரிய கௌரவத்தை தென்னாப்பிரிக்கா தக்க வைத்துக் கொண்டது.

இதைத்தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் நடைபெறும் 2வது போட்டியிலும் வென்று இந்தியாவுக்கு ஒயிட் வாஷ் தோல்வியை பரிசளிக்கும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா விளையாட உள்ளது. சொல்லப்போனால் இந்த மைதானத்தில் இதுவரை இந்தியாவை சந்தித்த 6 போட்டிகளில் 4 வெற்றி 2 ட்ராவை சந்தித்துள்ளது தென்னாப்பிரிக்கா தோற்றதே கிடையாது.

- Advertisement -

உலகக் கோப்பைக்கு சமம்:
அதனால் இம்முறையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அந்த அணியை தெம்பா பவுமா காயமடைந்துள்ளதால் டீன் எல்கர் தம்முடைய கடைசி போட்டியில் கேப்டனாக வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்றுள்ளார். மெதுவாக விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் வாய்ப்பு பெறாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடி 5331 ரன்களை குவித்து சிறந்த வீரராக செயல்பட்டுள்ளார்.

மேலும் 2021/22இல் 2 – 1 (3) என்ற கணக்கில் கேப்டனாகவும் அவர் இந்தியாவை தோற்கடித்த பெருமைக்குரியவர். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு தமக்கு பெரிய அளவில் கிடைக்காததால் இந்த கடைசி போட்டியை உலகக் கோப்பையாக நினைத்து வென்று 2 – 0 (2) கணக்கில் இந்தியாவை தோற்கடித்து விடை பெறுவதை விரும்புவதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார். முதல் போட்டியில் 185 ரன்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் வெற்றிக்காக மட்டுமே விளையாடுகிறேன். சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் வெற்றிகள் தொடர் வெற்றிகளை மட்டுமே விரும்புகிறேன். அது தான் நீங்கள் உங்களுடைய அணியுடன் பகிர்ந்து கொள்ளும் மகத்தான நினைவாகும். டெஸ்ட் தொடரை வெல்வதை விட வேறு பெரிய வெற்றி இருக்க முடியாது. ஒருவேளை உலகக் கோப்பை பெரிய வெற்றியாக இருக்கலாம். ஆனால் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை”

இதையும் படிங்க: நீங்க கிங் கோலியாக முடியாது.. ஆனா வெளிநாட்டுல கொஞ்சம் ஃபெர்பார்ம் பண்ணுங்க.. விமர்சித்த ஸ்ரீகாந்த்

“எனவே என்னுடைய இந்த வாய்ப்பில் நான் வெற்றி பெற விரும்புகிறேன். முதல் போட்டியில் தோற்றதால் இத்தொடரை எப்படியும் நாங்கள் தோற்க மாட்டோம் என்ற நிலையை எட்டியுள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் இப்போட்டியில் டிரா செய்தால் தான் அது எங்களுக்கு மிகப்பெரிய தோல்வியாக இருக்கும். புத்தாண்டில் நடைபெறும் இந்த போட்டி எங்களுக்கு மிகப் பெரியதாகும். எனவே 2 – 0 என்ற கணக்கில் வெல்வதை மட்டுமே நாங்கள் மனதில் வைத்துள்ளோமே தவிர டிரா செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை” என கூறினார்.

Advertisement