சம்பள உயர்வுடன் இந்திய அணியில் தேர்வுக்குழு தலைவராகும் – 2007 டி20 வென்ற நட்சத்திர முன்னாள் வீரர்

2007 T20 World Cup India
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக இருக்கும் இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளுக்கு சமீபத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அஸ்வினை தேர்வு செய்யாதது போன்ற குளறுபடிகள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மேலும் சமீபத்திய காலங்களில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததும் கேஎல் ராகுல் போன்ற சுமாராக செயல்படும் வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பதும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் லேட்டஸ்டாக அடுத்து நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படும் சர்பராஸ் கான் புறக்கணிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் அசத்திய ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டது உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மொத்தத்தில் இந்த அனைத்து குளறுபடிகளுக்கும் நியாயமாக செயல்பட வேண்டிய தேர்வுக்குழு ஒருதலைபட்சமான முடிவுகளை எடுப்பதே காரணமாக இருந்து வருகிறது எனலாம். பொதுவாக இந்தியா போன்ற வலுவான அணிக்கு நீண்ட வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் பெற்ற முன்னாள் வீரர்கள் தேர்வுக்குழு தலைவராக வந்தால் மட்டுமே நல்ல புரிதல்களுடன் தேவையான வீரர்களை தேர்வு செய்ய முடியும்.

- Advertisement -

புதிய தலைவர்:
ஆனால் இந்தியாவில் மட்டுமே ரசிகர்களுக்கு யாரென்றே தெரியாத ஓரிரு போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர்கள் அந்த பதவிக்கு வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில் ராயுடுவின் கேரியரை காலி செய்த எம்எஸ்கே பிரசாத்துக்கு பின் பொறுப்பேற்ற சேட்டன் சர்மாவும் சுமாராகவே செயல்பட்டு பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் சிக்கி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த எஸ்எஸ் தாஸ் தற்காலிக தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் காலியாக இருந்து வரும் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு நட்சத்திர முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக வர்ணனையாளராக செயல்படுவதால் கிடைக்கும் சம்பளத்தை விட இந்த பதவிக்கு மிகவும் குறைந்த சம்பளம் கொடுக்கப்படுவதாலேயே சேவாக் போன்ற நட்சத்திர வீரர்கள் விண்ணப்பிக்க விரும்புவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டு வரும் வருடத்திற்கு 1 கோடி என்ற சம்பளத்தை பிசிசிஐ உயர்த்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக இருந்து வந்த அகர்கர் அதை ராஜினாமா செய்து விட்டு தற்போது இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இந்த பதவிக்காக விண்ணப்பித்த இதர முன்னாள் வீரர்களை காட்டிலும் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவமும் நட்சத்திர அந்தஸ்தையும் கொண்டுள்ள காரணத்தால் அஜித் அகர்கர் இந்தியாவின் அடுத்த தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சொல்லப்போனால் 2020லேயே விண்ணப்பித்தும் சீனியராக இருந்த சேட்டன் சர்மாவுக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்த பிசிசிஐ அவரை தேர்ந்தெடுக்கவில்லை. இருப்பினும் 2வது முயற்சியில் அந்த பதவியை பெறுவதற்கு தயாராகும் அவர் எஸ்எஸ் தாஸ், சலீல் அன்கோலா, ஸ்ரீதரன் சரத், சுப்ரதோ பானர்ஜி ஆகிய உறுப்பினர்களின் தலைவராக இருந்து தேர்வுக்குழுவை வழிநடத்தி இந்திய அணியை தேர்வு செய்ய உள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு அனுபவத்தை கொண்ட அஜித் அகர்கர் 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க:இந்தமுறை விடுங்க.. அடுத்த உலகக்கோப்பையில விராட் கோலி ஆடுவாரா? – கிரிஸ் கெயில் அளித்த நேரடி பதில் இதோ

அதில் 346 விக்கெட்களை எடுத்துள்ள அவர் இன்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் (21 பந்துகள்) என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சுனில் கவாஸ்கர் முதல் சச்சின் வரை பல இந்திய ஜாம்பவான்களால் அடிக்காத சதத்தை தனது பெயரில் பதிவு செய்துள்ள அவர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலக கோப்பையை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான அணியிலும் இடம் பிடித்திருந்தார். அந்த வகையில் நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் இந்த பதவிக்கு பொருத்தமானவராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது

Advertisement