
இந்திய அணியின் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 90 ஒருநாள் போட்டிகள் 20 டி20 போட்டிகள் மற்றும் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 198 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதோடு தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
37 வயதான ரகானே ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்தார். 37 வயதான அவர் இதுவரை இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு சில போட்டிகளிலும் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
ஆனால் தற்போது 37 வயதினை எட்டியுள்ள அவரது மோசமான ஃபார்ம் மற்றும் இளம் வீரர்களின் வருகை ஆகியவற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக 2023-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர் அதன் பின்னர் இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அங்கு பார்வையாளராக கலந்து கொண்ட ரகானேவிடம் இங்கிலாந்து வர்ணனையாளர்கள் டெஸ்ட் போட்டிகள் குறித்த ஒரு சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். அதில் ரகானே கூறியதாவது :
இன்னும் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். ஏனெனில் உண்மையிலேயே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு அவ்வளவு பிடிக்கும். அதன் காரணமாக தொடர்ச்சியான பயிற்சிகளையும் நான் இன்றளவும் மேற்கொண்டு வருகிறேன். என்னுடைய வழக்கமான கிரிக்கெட் தொடர்பான பணிகளை விடாமல் செய்து வரும் நான் எதிர்வரும் டொமஸ்டிக் சீசனுக்காக தயாராக இருக்கிறேன்.
இதையும் படிங்க : கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. லன்ச்க்கு அப்புறம் நாங்க ஜெயிச்சிருவோம் – வாஷிங்டன் சுந்தர் பதிலடி
தற்போது இந்திய அணியின் தேர்வாளர்கள் என்னை அணுகவில்லை என்றாலும் நிச்சயம் நான் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பும் வாய்ப்பை பெறுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது என அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.