லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று கடைசி நாளை எட்டியுள்ளது. இன்றைய கடைசிநாள் ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே சரிசமமான வெற்றி வாய்ப்பு காணப்படுவதால் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
மத்திய உணவிற்கு பிறகு இந்திய அணி வெற்றிபெறும் : வாஷிங்க்டன் சுந்தர்
ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இரு அணிகளுமே சரியாக 387 ரன்களை குவிக்க இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை எதிர்த்து விளையாடி வரும் இந்திய அணியானது :
போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் குவித்துள்ளது. அதனால் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை. அதேவேளையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 6 விக்கெட் தேவை என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டம் முடிந்து பேசிய இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளரான மார்க்கஸ் ட்ரெஸ்கோதிக் கூறுகையில் :
இந்திய அணியை நாங்கள் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரத்திலேயே வீழ்த்திக் காட்டுவோம். மீதமுள்ள ஆறு விக்கெட்டுகளையும் எளிதாக எடுத்து எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று ஒரு கருத்தினை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது அந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள தமிழக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் :
தற்போது நாங்கள் இருக்கும் நிலை சற்று பின்னடைவு தான் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில் இன்னும் ஒரு விக்கெட் குறைவாக இழந்திருந்தால் இன்னும் ஆட்டம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் அவர்கள் கூறுவது போன்று ஒன்றும் கிடையாது. நிச்சயமாக இந்திய அணி மதிய உணவிற்கு பிறகு இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று அவரது கருத்திற்கு வாஷிங்டன் சுந்தர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : 1 மணிநேரம் போதும்.. இதை செய்து இந்திய அணியை வீழ்த்துவோம்.. இங்கிலாந்து கோச் திமிர் பேச்சு
இந்திய அணி சார்பாக தற்போது கே.எல் ராகுல் 33 ரன்களுடன் களத்தில் இருக்கும் வேளையில் ரிஷப் பண்ட் இன்று அவருடன் பேட்டிங் செய்ய வருவார். அடுத்ததாக நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



