- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த கோபத்தை பாத்து தான்.. 2021இல் சிராஜை இந்தியாவுக்காக விளையாட வெச்சேன்.. கேப்டன் ரஹானே பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. அந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றிய போதிலும் பவுலிங் துறையில் முகமது சிராஜ் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அத்தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்ற சிராஜ் 23 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதனால் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்த அவர் பும்ரா இல்லாத நிலைமையில் பொறுப்புடன் விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்டு 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆர்வம், கோபமான சிராஜ்:

அந்த வெற்றிக்கு மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் பலரது பாராட்டுகளைப் பெற்று வரும் அவர் கடந்த 2020/21 ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா 36க்கு அவுட்டாகி திணறிய போது கேப்டனாக பொறுப்பேற்ற ரகானே தலைமையில் அறிமுகமானார். அத்தொடரின் போது தான் சிராஜ் தந்தை இயற்கையை எய்தினார்.

இருப்பினும் அதற்காக நாடு திரும்பாத சிராஜ் தொடர்ந்து நாட்டுக்காக அறிமுகமாகி விளையாடி காபா போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். இந்நிலையில் முகமது சிராஜிடம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததைப் பார்த்தே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பைக் கொடுத்ததாக அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ரஹானே பாராட்டு:

“நீண்ட நேரம் பவுலிங் செய்ய முடியும் என்பதே சிராஜிடம் நான் விரும்பிய விஷயமாகும். 2020 – 21 தொடரில் கூட அவர் அதே தீவிரத்துடன் அசத்த விரும்பினார். ஆஸ்திரேலியாவில் சிராஜ் அறிமுகமான போது கோபமாக இருந்தார். ஏனெனில் அறிமுகப் போட்டியில் அவருக்கு நான் மிகவும் தாமதமாக பவுலிங் செய்யும் வாய்ப்பைக் கொடுத்தேன்”

இதையும் படிங்க: டி20 போட்டிகளில் முதல் வீரராக இமாலய சாதனையை நிகழ்த்திய ரஷீத் கான் – விவரம் இதோ

“அந்தக் கோபம் இன்னும் அவரது பக்கம் இருக்கிறது. கோபமே சிராஜின் சிறந்த செயல்பாடுகளையும் கொண்டு வருகிறது. அந்த கோபத்தை நாம் இங்கிலாந்து தொடரிலும் பார்த்தோம். அவரது பந்து வீச்சில் ஆக்ரோஷம், பந்து வீசும் போது தீவிரத்தன்மை ஆகியவை இருக்கிறது. எப்போதும் அவர் முதல் பந்தை வீசும் போது தான் முழுமையாக (வார்ம் அப்) சூடாவார். அது ஒரு சிறந்த பவுலருக்கான தரமாகும்” என்று கூறினார்.

- Advertisement -