ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் கடந்த 2015-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை அந்த அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 114 ஒருநாள் போட்டிகள் மற்றும் 96 டி20 போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அவர் 136 போட்டிகளில் 158 விக்கெட்டுகளை வீழ்த்தியுஉள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரஷீத் கான் :
சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடுவதை தாண்டி உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் தொடர்களில் முக்கிய வீரராகவும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹன்ட்ரெட் என்கிற 100 பந்துகள் கொண்ட போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் தி ஹன்ட்ரெட் தொடரில் லண்டன் ஸ்பிரிட் மற்றும் ஓவல் இன்விசிபல் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட் அணி 18.4 ஓவர்களில் 80 ரன்களுக்கு சுருண்டது.
இந்த போட்டியில் ஓவல் இன்விசிபல் அணி சார்பாக ரசீத் கான் மற்றும் சாம் கரன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரஷீத் கான் டி20 போட்டிகளில் இமாலய சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுயுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் டி20 லீக் என ஒட்டுமொத்தமாக இதுவரை அவர் விளையாடியுள்ள டி20 போட்டிகளின் அடிப்படையில் 478 ஆட்டங்களில் விளையாடி 651 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : லெஜெண்ட்ஸ் லீக் போல இந்தியா – பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டி திடீரென ரத்தாகுமா? அமீரக நிர்வாகி பேட்டி
இதன் மூலம் உலகின் முதல் வீரராக டி20 கிரிக்கெட் போட்டிகளில் 650 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய ஓவல் இன்விசிபல் அணி 13.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 81 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



