95க்கு அவுட்.. தோல்விக்கான பொறுப்பை ஏத்துகிறேன்.. பஞ்சாப்பிடம் தோற்க இதான் காரணம்.. ரஹானே பேட்டி

Ajinkya Rahane
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் முல்லான்பூரில் ஏப்ரல் 15ஆம் தேதி 31வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு சுருண்டதால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30, பிரியான்ஸ் ஆர்யா 22 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய கொல்கத்தாவை அபாரமாக பவுலிங் செய்த பஞ்சாப் 15.1 ஓவரில் 95க்கு சுருட்டி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய அணியாக பஞ்சாப் சாதனை படைத்தது. அதிகபட்சமாக ரகுவன்சி 37 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

கைநழுவிய வெற்றி:

இந்நிலையில் ரகுவன்ஷி – தாம் நன்றாக விளையாடியதால் 72/3 என்ற நிலையில் கொல்கத்தா வெற்றி பெறும் வாய்ப்பை வைத்திருந்ததாக கேப்டன் ரஹானே கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்து தோல்வியை சந்தித்ததற்கான பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எதையும் சொல்வதற்கு இல்லை. என்ன நடந்தது என்பதை பார்த்தோம். எங்களுடைய முயற்சிகளில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளோம்”

“அது தவறிப் போனாலும் தவறான ஷாட்டை விளையாடியதற்காக நான் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். ரகுவன்சி உறுதியாக தெரியாமல் இருந்தார். அவருடைய எல்பிடபிள்யூ விக்கெட் அம்பயர்ஸ் முடிவாக இருக்கலாம் என்று அவர் சொன்னார். அது உறுதியாகத் தெரியாததால் நானும் ரிவ்யூ எடுக்கவில்லை. ரன்ரேட் பற்றி கவலைப்படவில்லை”

- Advertisement -

ரஹானே பொறுப்பு:

“பேட்டிங் துறையில் நாங்கள் மோசமாக விளையாடியதால் தோல்விக்கானப் பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். பவுலர்கள் இந்த மைதானத்தில் பஞ்சாப்பை 111க்கு சுருட்டி நன்றாக வேலை செய்தனர். இந்த மைதானத்தில் முழு வேகத்துடன் நீங்கள் பேட்டிங் செய்வது நன்றாக இருக்கலாம். ஸ்வீப் ஷாட் விளையாடுவதற்கு கடினமான ஒன்றாக இருந்தது. நாங்கள் கண்மூடித்தனமாக இருந்ததற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்”

இதையும் படிங்க: அதை பாத்ததுமே வெற்றி பஞ்சாப்புக்கு தான்னு தெரிஞ்சுடுச்சு.. அவரை வெச்சு அட்டாக் பண்ணேன்.. ஸ்ரேயாஸ் பேட்டி

“இச்சமயத்தில் எனது மனதில் நிறைய விஷயங்கள் செல்கின்றன. இது எங்களுக்கு எளிமையான சேசிங் வாய்ப்பாக இருந்தது. இருப்பினும் அதை விட்டதால் எனக்கு நானே அமைதியாக இருந்து எங்களுடைய வீரர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கிறேன். இப்போதும் நேர்மறையாக இருக்கிறேன். பாதி தொடர் மீதம் இருப்பதால் எங்களுடைய பின்னடைவுகளை சரி செய்து முன்னோக்கி செல்ல வேண்டும்” என்று கூறினார்.

Advertisement