வீடியோ : மும்பையில் பிறந்து மும்பையை வெச்சு செய்த ரகானே, ஐபிஎல் வரலாற்றில் மும்பைக்கு எதிராக இரட்டை மாஸ் சாதனை

Ajinkya Rahane.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் வெற்றிகரமான அணிகளாக திகழ்வதுடன் பரம எதிரிகளாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 157/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 21 (13) இஷான் கிசான் 32 (21) என தொடக்க வீரர்கள் அதிரடியான ரன்களை குவிக்க முயற்சித்து குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் மிடில் ஓவர்களில் அபாரமாக பந்து வீசிய சென்னை அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 1 (2), கேமரூன் கிரீன் 12 (11), திலக் வர்மா 22 (18) அர்சத் காம் 2 (4), ட்ரிஷன் ஸ்டப்ஸ் 5 (10) என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி அசத்தியது. இருப்பினும் கடைசி நேரத்தில் டிம் டேவிட் அதிரடியாக 31 (22) ரன்களும் ரித்திக் ஷாகின் 18* (13) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றிய நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களையும் மற்றும் மிட்சேல் சாட்னர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

மாஸ் ரகானே:
அதை தொடர்ந்து 158 ரன்களை துரத்திய சென்னைக்கு முதல் ஓவரிலேயே டேவோன் கான்வே டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்ததாக அனுபவ வீரர் அஜிங்க்ய ரகானே களமிறங்கினார். குறிப்பாக மும்பையில் பிறந்து ஐபிஎல் தொடரில் தொடரில் நல்ல ரன்களை குவித்து இந்தியாவுக்கும் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரிய அவர் சென்னை அணிக்காக முதல் முறையாக களமிறங்கிய இந்த அறிமுக போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் ஆரம்பத்திலிருந்தே சரவெடியாக பேட்டிங் செய்தார்.

பொதுவாக சற்று மெதுவாக பேட்டிங் செய்யும் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்படும் அவர் அப்படியே நேர்மாறாக இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்து அர்ஷத் கான் வீசிய 4வது ஓவரில் 6, 4, 4, 4, 4, 1 என 23 ரன்களை தெறிக்க விட்டு ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். அதே வேகத்தில் வெறும் 19 பந்துகளில் அரை சதமடித்த அவர் 2வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 7 பவுண்டரி 3 சிக்சருடன் 61 (27) ரன்களை 225.93 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அந்த அதிரடியை வீணாக்காமல் அடுத்து வந்த சிவம் துபே 28 (26) ரன்கள் எடுத்து அவுட்டானாலும் மறுபுறம் நிதானமாக செயல்பட்ட ருதுராஜ் கைக்வாட் 40* (36) ரன்களும் அம்பத்தி ராயுடு 20* (16) ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

அதனால் 18.1 ஓவரிலேயே 159/3 ரன்கள் எடுத்த சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த சீசனில் 3 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய மும்பை இந்த சீசனில் 2 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்து பின்தங்கியது.

1. இந்த போட்டியில் 19 பந்துகளிலேயே அரை சதமடித்த அவர் 2023 ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அதை சதமடித்த வீரர் என்ற ஜோஸ் பட்லர் – ஷார்துல் தாகூர் (தலா 20 பந்துகள்) ஆகியோரது சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.

- Advertisement -

2. அத்துடன் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பைக்கு எதிராக அதிவேகமாக அரை சதமடித்த சென்னை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த அவர் ஒட்டுமொத்தமாக சென்னைக்காக அதிவேகமாக அரை சதமடித்த 2வது வீரர் என்ற மொய்ன் அலி சாதனையையும் சமன் செய்தார். அந்த பட்டியல்:
1. சுரேஷ் ரெய்னா : 16 பந்துகள், பஞ்சாப்புக்கு எதிராக, 2014
2. அஜிங்கிய ரகானே : 19 பந்துகள், மும்பைக்கு எதிராக, 2023*
3. மொய்ன் அலி : 19 பந்துகள், ராஜஸ்தானுக்கு எதிராக, 2022

இதையும் படிங்க:IPL 2023 : நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஜாஸ் பட்லரின் சாதனையை முறியடித்த ரஹானே – இதை யாருமே எதிர்பார்க்கல

3. இவை அனைத்தையும் விட ஐபிஎல் வரலாற்றில் மும்பைக்கு எதிராக பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற மாஸ் சாதனையும் மும்பையில் பிறந்த ரகானே படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. அஜிங்க்ய ரகானே : 53* ரன்கள்
2. ட்வயன் ஸ்மித் : 50 ரன்கள்
3. ஆடம் கில்கிறிஸ்ட் : 47 ரன்கள்

Advertisement