IPL 2023 : நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஜாஸ் பட்லரின் சாதனையை முறியடித்த ரஹானே – இதை யாருமே எதிர்பார்க்கல

Rahane
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டியானது இன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசும் என்று அறிவித்தது.

MI vs CSK 2

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 18.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக 27 பந்துகளை சந்தித்த அஜிங்க்யா ரஹானே 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 61 ரன்களை குவித்து அசத்தினார். இந்நிலையில் அவர் அடித்த இந்த அரை சதத்தின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லரின் சாதனை ஒன்றினையும் அவர் முறியடித்துள்ளார்.

Rahane 1

அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற பட்டியலில் ஜாஸ் பட்லர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இருபது பந்துகளில் அரை சதமடித்து முதல் இடத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : CSK vs MI : பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான் – தோனி சொன்ன பதில் இதோ

இவ்வேளையில் தற்போது இன்று நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் இந்த இன்னிங்சில் விளையாடிய ரகானே 19 பந்துகளை எதிர் கொண்டு அரைசதம் அடித்தார். அதன்காரணமாக அவரே இந்த தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி இதுவே அவரது அதிவேக அரை சதமாகவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement