CSK vs MI : பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான் – தோனி சொன்ன பதில் இதோ

MS-Dhoni
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டியானது மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

- Advertisement -

அதன்படி முதலில் பந்துவீசிய சிஎஸ்கே அணியானது தங்களது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி மும்பை அணியை 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்களுக்கு சுருட்டியது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் இசான் கிஷன் 32 ரன்களையும், டிம் டேவிட் 31 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் தற்போது 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் முக்கிய வீரரான பென் ஸ்டோக்ஸ் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தோனிக்கு அடுத்து சென்னை அணி கேப்டனாக பார்க்கப்படும் அவர் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் இரண்டு போட்டியில் இடம் பிடித்த பென் ஸ்டோக்ஸ் இன்று மூன்றாவது போட்டியில் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Stokes

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் முழுவதுமாக விளையாட மாட்டேன் என்றும் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாக சி.எஸ்.கே அணியில் இருந்து விலகி இங்கிலாந்து சென்றடைவேன் என்று அவர் கூறியிருந்த வேளையில் தற்போது விளையாடும் ஒரு சில போட்டிகளிலேயே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அனைவரும் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் இருந்து ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டாசின் போதே சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : பென் ஸ்டோக்ஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை என்று தோனி தெரிவித்தார்.

இதையும் படிங்க : வீடியோ : சூரியகுமாரை காலி செய்த தோனி ரிவியூ சிஸ்டம், ஜடேஜா – பிரிட்டோரியஸ் சூப்பர் கேட்ச், மும்பையின் ஸ்கோர் இதோ

அதேபோன்று மொயின் அலி இந்த போட்டியில் விளையாடவில்லை என்றும் அவர்கள் இருவருக்கு பதிலாக ரகானே மற்றும் பிரிட்டோரியஸ் ஆகியோர் விளையாடுவதாக தோனி அறிவித்தார். என்ன தான் தோனி காயம் என்று கூறி ஸ்டோக்சை தோனி வெளியேற்றி இருந்தாலும் கடந்த 2 போட்டிகளாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டான பிரிட்டோரியசை தோனி அணியில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement