வீடியோ : சூரியகுமாரை காலி செய்த தோனி ரிவியூ சிஸ்டம், ஜடேஜா – பிரிட்டோரியஸ் சூப்பர் கேட்ச், மும்பையின் ஸ்கோர் இதோ

CSK vs MI
- Advertisement -

கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. ஐபிஎல் வரலாற்றில் பரம எதிரிகளாகவும் வெற்றிகரமான அணிகளாகவும் போற்றப்படும் இவ்விரு அணிகள் கடந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்ததால் இம்முறை சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 21 (13) ரன்கள் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்த போது துசார் டேஷ்பாண்டே கிளீன் போல்ட்டாக்கினார். அதே போல மற்றொரு தொடக்க வீரர் இசான் கிசான் தனது பங்கிற்கு 5 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்திருந்த போது ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கினார். அந்த நிலையில் களமிறங்கிய உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் வழக்கம் போல களமிறங்கிய முதல் பந்திலேயே அதிரடியாக விளையாட முயற்சித்தார்.

- Advertisement -

குறிப்பாக மைதானத்தின் அனைத்து திசைகளிலும் வித்தியாசமாக அடிக்கக்கூடிய அவர் மிட்சேல் சாட்னர் வீசிய 8வது ஓவரின் ஒய்ட் போல வந்த 2வது பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் அதை அவர் தவற விட்ட நிலையில் கேட்ச் பிடித்த தோனி அவுட் கேட்டார். ஆனாலும் எட்ஜ் எதுவும் வாங்கவில்லை என்று நினைத்த அம்பையர் அவுட் கொடுக்க மறுத்ததால் தோனி உடனடியாக ரிவியூ எடுத்தார். பெரிய திரையில் அதை சோதித்து பார்க்கப்பட்ட போது சூரியகுமாரின் பின் பக்க பேட்டில் பந்து எட்ஜ் வாங்கியது தெளிவாகத் தெரிந்ததால் 3வது நடுவர் அவுட் கொடுத்தார்.

அதனால் தோனி ரிவியூ சிஸ்டம் என ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் அடுத்த ஓவரில் கேமரூன் கிரீன் அதிரடியாக அடிக்க முயற்சித்த பவுண்டரி பந்து அதிவேகத்தில் நேராக தம்மிடம் வந்ததை அசால்டாக பிடித்த ரவீந்திர ஜடேஜா 12 ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலையில் அர்ஷத் கான் 2 (4) ரன்களில் அவுட்டானதால் 76/5 என தடுமாறிய மும்பையை காப்பாற்ற போராடிய திலக் வர்மா 22 (18) ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் ட்ரிஸ்தான் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாட முயற்சித்து பறக்க விட்ட ஒரு சிக்சரை பவுண்டரி எல்லையில் ட்வயன் பிரிட்டோரியஸ் தடுத்து மைதானத்திற்குள் தூக்கிப்போட்டு விழுந்தார்.

- Advertisement -

அதை வேகமாக ஓடி வந்த ருத்ராஜ் கைக்வாட் மெதுவாக கேட்ச் பிடித்ததால் அவர் 5 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் கடைசி நேரத்தில் டிம் டேவிட் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 31 (22) ரன்களும் ரித்திக் ஷாகின் 3 பவுண்டரிகளுடன் 18* (13) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் மும்பை கடுமையாக போராடி 157/8 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: IPL 2023 : சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் அவர்தான். மொயின் அலி அளித்த பதில் – விவரம் இதோ

சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் துசார் தேஸ்பாண்ட் மற்றும் மிட்சேல் சாட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதை அடுத்து சவாலை கொடுக்க கூடிய வான்கடே மைதானத்தில் 158 என்ற கடினமான இலக்கை சென்னை துரத்தி வருகிறது.

Advertisement