IPL 2023 : சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் அவர்தான். மொயின் அலி அளித்த பதில் – விவரம் இதோ

Moeen Ali
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் இந்த ஆண்டு நடப்பு 16-வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய இந்து தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தை கடந்து மிகுந்த சுவாரசியத்துடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

IPL-2023

- Advertisement -

இந்த ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக ஐந்து முறை மும்பை அணியும், நான்கு முறை சென்னை அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்பது எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஏனெனில் எல்லா ஆண்டும் இவ்விரு அணிகளே ஐபிஎல் தொடரில் ஆதிக்கத்தை செலுத்தும் அணிகளாக இருக்கின்றன. இந்த இரு அணிகளுடன் மோதி தான் எந்த ஒரு அணியும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நிலைமையும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நடப்பு ஐபிஎல் தொடருக்கான மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

Ben-Stokes

இந்நிலையில் இந்த தொடரானது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசன் என்பதனால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஏற்கனவே ஜடேஜா கடந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது தோனியின் தலையீடு அதிகமாக இருந்ததன் காரணமாக ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இனியும் ஜடேஜா சென்னை அணிக்கு கேப்டனாக வாய்ப்பில்லை என்பதனால் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக இருக்கப்போவது யார் என்பது குறித்த கேள்விக்கு சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி தனது பதிலை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சென்னை அணியின் அடுத்த கேப்டனாக தோனிக்கு அடுத்து பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : முதல் ஓவரிலேயே முடித்த ட்ரெண்ட் போல்ட் – அதிர்ஷ்டம் கிடைத்தும் தவறான முடிவால் டெல்லி ஹாட்ரிக் தோல்வி பெற்றது எப்படி

ஏனெனில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் அவர் கேப்டன்சி பொறுப்பில் நிறையவே அனுபவம் உள்ளவர். என்னை பொறுத்தவரை அவர் தான் சென்னை அணி வீரர்களை கையாளுவதில் சிறப்பாக இருப்பார் என்று கருதுகிறேன் என்று மொயின் அலி தெரிவித்தார். அவரை தவிர்த்து துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிற்கு பரிசீலனையில் உள்ளார் என்று மொயின் அலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement