இந்த ஒரு விஷயத்தில் ஜடேஜாவை அவர் மிஞ்ச முடியாது. நீங்களே பாருங்க – அஜய் ஜடேஜா பளீர் பேட்டி

Ajay-Jadeja
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அண்மையில் இந்திய அணியிலிருந்து வெளியேறினார். அதோடு அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் விளையாட முடியாத சூழ்நிலையில் அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அவரது இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

Ravindra-Jadeja

- Advertisement -

அப்படி ஜடேஜாவிற்கு பதிலாக அணியில் இடம் பிடித்த அக்சர் பட்டேல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தனது அசத்தலான ஆட்டத்தை பந்துவீச்சை வெளிப்படுத்தி தொடர்நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.

டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் ஜடேஜா ஆடாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் வேளையில் அந்த இடத்தில் தற்போது அக்சர் பட்டேல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் அணியின் முக்கிய வீரராக இருப்பார் என கேப்டன் ரோகித் சர்மாவும் புகழ்ந்திருந்தார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாக செயல்பட கூடியவர் என்பது நாம் அறிந்ததே.

Axar Patel Rohit Sharma

ஆனால் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா அளித்துள்ள பேட்டியில் ஜடேஜாவின் பீல்டிங்-க்கு நிகராக அக்சர் பட்டேலால் அருகில் கூட வர முடியாது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : அக்சர் பட்டேல் நன்றாக பந்து வீசுகிறார் அதோடு பேட்டிங்கிலும் ஓரளவு டீசன்டாகவே செயல்படுவார். ஆனாலும் ஜடேஜாவின் ஃபீல்டிங்-க்கு நிகராக அக்சர் படேலால் பீல்டிங் செய்ய முடியாது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் கூட அவர் இரண்டு கேட்ச்களை தவற விட்டார். அந்த இரண்டு கேட்ச்களுமே மிக எளிமையான கேட்ச்கள். எனவே ஜடேஜாவிற்கு மாற்றாக அக்சர் பட்டேல் அணியில் இருந்தாலும் அவரது பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இப்போலாம் பெயிலியரை பாத்து நான் பயப்படறதே கிடையாது. நிச்சயம் எனக்கு டீம்ல இடம் கிடைக்கும் – இளம்வீரர் உறுதி

அவர் கூறியது போலவே : அக்சர் பட்டேல் பந்துவீச்சில் அருமையாக செயல்பட்டு தனது தரத்தை நிரூபித்து இருந்தாலும், மைதானத்தில் பீல்டிங்கின் போது அவரிடம் வெளிப்படும் தவறுகள் அணிக்கு பாதகமாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் அதனை அவர் விரைவில் சரி செய்து கொள்வார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement