இப்போலாம் பெயிலியரை பாத்து நான் பயப்படறதே கிடையாது. நிச்சயம் எனக்கு டீம்ல இடம் கிடைக்கும் – இளம்வீரர் உறுதி

kuldeep-yadav
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ள வேளையில் தற்போது இந்திய ஏ அணியானது சஞ்சு சாம்சன் தலைமையில் நியூசிலாந்து ஏ அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் அடுத்த கட்ட இளம் வீரர்கள் பலர் இடம் பிடித்து விளையாடி வருகின்றனர்.

Kuldeep 2

- Advertisement -

அதன்படி கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் நிரந்தர இடம் இன்றி தவித்து வரும் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தற்போது இந்த நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக சென்னையில் நடைபெற்ற போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய அவர் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பார்ம் அவுட் காரணமாக இந்திய அணியிலிருந்து நிராகரிக்கப்பட்டு வந்த குல்தீப் யாதவ் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் நல்ல அற்புதமான பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். அதனை தொடர்ந்து இந்த நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்நிலையில் மீண்டும் இந்திய முதன்மை அணியில் விளையாடுவது குறித்து பேசியுள்ள அவர் கூறுகையில் :

Kuldeep-1

நான் கட்டாயம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன். எனக்கு காயம் ஏற்பட்டு நான் விளையாட முடியாமல் இருந்த போது தான் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு மீண்டு வந்ததும் என்னுடைய கரியரில் கவனத்தை செலுத்தி என்னுடைய பவுலிங் லென்த் மற்றும் லைன் மீது அதிக கவனத்தை செலுத்தினேன்.

- Advertisement -

விக்கெட் கிடைக்கிறதோ, இல்லையோ சரியான ஏரியாவில் பந்து வீசி கட்டுக்கோப்புடன் ஓவர்களை வீசினால் நிச்சயம் விக்கெட் கிடைக்கும் என்று தற்போது கடின உழைப்பினை வெளிப்படுத்தி வருகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் காயமடைந்த போது தான் என்னுடைய பவுலிங்கில் உள்ள பலவீனம் என்னுடைய திறனில் இருந்த குறைபாடு என அனைத்தையும் யோசித்துப் பார்த்தேன்.

இதையும் படிங்க : IND vs RSA : தெ.ஆ அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து தீபக் ஹூடா வெளியேற்றம் – காரணம் இதுதானாம்

பின்னர் காயத்திற்கான சிகிச்சை செய்து கொண்ட பிறகு முன்னேறி வந்துள்ளேன். இப்போதெல்லாம் நான் பெயிலியர் ஆனால் பயப்படுவது கிடையாது. ஏனெனில் நிச்சயம் என்னால் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதோடு அதற்காக என்னுடைய கடின உழைப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறேன் என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement