IND vs RSA : தெ.ஆ அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து தீபக் ஹூடா வெளியேற்றம் – காரணம் இதுதானாம்

Deepak Hooda
- Advertisement -

இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து எதிர்வரும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணியானது இங்கு இந்திய அணிக்கு எதிராக முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

Temba-Bavuma

- Advertisement -

அதன் பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. முன்னதாக இந்த டி20 தொடரின் முதலாவது போட்டியானது நாளை செப்டம்பர் 28-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஏற்கனவே திருவனந்தபுரம் சென்றடைந்து தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி அக்டோபர் (2) இரண்டாம் தேதி கவுகாத்தி நகரிலும், அக்டோபர் (4) நான்காம் தேதி இந்தூரில் கடைசி டி20 போட்டியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தீபக் ஹூடா இத்தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

Deepak Hooda 1

அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இடம் பிடித்திருந்த தீபக் ஹூடா நடைபெற்று முடிந்த அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதைத்தொடர்ந்து இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னதாக அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே இந்த தொடரில் இருந்து அவர் வெளியேறி உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றுள்ளதால் அதற்கு முன் தனது உடற்தகுதியை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அவர் இந்து தொடரில் இருந்து வெளியேறி காயத்திற்கான சிகிச்சை எடுக்க உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs RSA : முதல் டி20 போட்டி நடக்கும் க்ரீன்ஃபீல்ட் மைதானம் எப்படி, வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

இந்நிலையில் காயம் காரணமாக வெளியேறியுள்ள தீபக் ஹூடாவிற்கு பதிலாக இந்திய அணியில் மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பிடித்துள்ளார். அதேபோல ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சபாஷ் அஹமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் பி.சி.சி.ஐ தெளிவான அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement