IND vs RSA : முதல் டி20 போட்டி நடக்கும் க்ரீன்ஃபீல்ட் மைதானம் எப்படி, வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

GReenField Stadium Ground Kerala
- Advertisement -

விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனைக் இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் அந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்ற இந்தியா சொந்த மண்ணில் நடப்பு டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்கேற்ற டி20 தொடரில் மீண்டெழுந்து 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

அதைத்தொடர்ந்து சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்தியா இதுவரை செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இத்தொடரையும் வென்று வெற்றியுடன் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட போராட உள்ளது. மறுபுறம் நம்பர் ஒன் அணியாக இருந்தாலும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா மழையின் குறுக்கீட்டால் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.

- Advertisement -

க்ரீன்பீல்ட் மைதானம்:
அந்தளவுக்கு தரமான வீரர்களுடன் மீண்டும் இம்முறை வந்துள்ள தென் ஆப்பிரிக்காவை குறைத்து மதிப்பிடாமல் போராடி தோற்கடிக்க இந்தியா தயாராகியுள்ளது. எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதியன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. கடந்த 2015இல் தோற்றுவிக்கப்பட்டு 2017 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் இம்மைதானம் 55000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

1. இம்மைதானத்தில் இதுவரை 2 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 1 முறையும் சேசிங் செய்த அணி 1 முறையும் வென்றுள்ளது.

- Advertisement -

2. கடந்த 2017இல் முதல் முறையாக இங்கு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மழையால் 8 ஓவர்களாக நடைபெற்ற அப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 68 ரன்களை எட்ட விடாமல் 2 விக்கெட்டுகளை எடுத்து அற்புதமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

3. இருப்பினும் கடந்த 2019ஆம் ஆண்டு இங்கு கடைசியாக நடைபெற்ற போட்டியில் இந்தியா நிர்ணயித்த 171 ரன்களை அசால்ட்டாக துரத்திய வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எனவே இங்கு முதல்முறையாக தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.

- Advertisement -

4. இம்மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த டாப் 3 பேட்ஸ்மேன்கள்:
1. லெண்டில் சிமன்ஸ் : 67
2. ஷிவம் துபே : 54
3. எவின் லெவிஸ் : 40

5. இந்த மைதானத்தில் எந்த இந்திய பேட்ஸ்மேனும் இதுவரை சதமடித்ததில்லை என்ற நிலைமையில் அதிகபட்சமாக இந்திய வீரர் சிவம் துபே ஒரு அரை சதமடித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோரையும் அவரே (54 ரன்கள்) பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

7. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த இந்திய பவுலராக ஜஸ்பிரித் பும்ரா (2) உள்ளார். இம்மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 170/7, 2019

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் திருவனந்தபுரம் நகரில் போட்டி நாளன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என இந்திய வானிலை மையம் கூறுகிறது. குறிப்பாக போட்டி நடைபெறும் இரவு நேரத்தில் 71% மேகக் கூட்டங்கள் காணப்பட்டாலும் மழைக்கான வாய்ப்பு 8% மட்டுமே உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இதுவரை 2 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் 3 வருடங்கள் கழித்து சர்வதேச போட்டி நடைபெறுவதால் வரலாற்றை பார்க்காமல் சமீபத்திய உள்ளூர் போட்டிகளை பார்க்க வேண்டியுள்ளது. அந்த வகையில் கடைசியாக இங்கு நடைபெற்ற 14 உள்ளூர் டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வெறும் 127 ஆகும். அதனால் இந்த மைதானம் பவுலர்களுக்கு கைகொடுக்கும் மைதானமாக பார்க்கப்படுகிறது.

எனவே மேக மூட்டத்தை பயன்படுத்தி புதிய பந்தை ஸ்விங் செய்யும் பவுலர்கள் சவாலாக இருப்பார்கள். ஆனாலும் அதற்கு அஞ்சாமல் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு ஆரம்ப கட்ட சவாலை சமாளித்து செட்டிலாகி விட்டால் பின்பு பேட்ஸ்மேன்களும் தங்களது திறமையால் நல்ல ரன்களை எடுக்கலாம். மேலும் மிடில் ஓவர்களில் திறமையான சுழல் பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அத்துடன் இது இரவு நேர போட்டியாக நடைபெறுவதால் பனியின் தாக்கமும இருக்கலாம். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசி சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement