- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 மேட்ச்சையும் ட்ரா பண்ற மாதிரி பிளேயிங் லெவனை எடுத்த கில்.. கேப்டனாக அசத்த இதான் காரணம்.. அஜய் ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை போராடி 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றியைப் பெற்றது.

முன்னதாக இத்தொடருக்கு முன்பாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட போது விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே பிராட்மேனுக்குப் பின் அதிக ரன்களை (754) குவித்து கில் சாதனை படைத்துள்ளார். அத்துடன் தனது முதல் தொடரிலேயே சவாலான இங்கிலாந்து மண்ணில் இளம் அணியை வைத்து அவர் இந்தியாவை தோல்வியை சந்திக்க விடாமல் அசத்தியுள்ளார்.

- Advertisement -

தற்காப்பு கேப்டன்:

இந்நிலையில் சுப்மன் கில் முதலில் தற்காப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் தடுப்பாட்ட கேப்டன் என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். அதனாலேயே அனைத்து 5 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அவர் குல்தீபை தேர்ந்தெடுக்காமல் ஆழமான பேட்டிங் வரிசை கொண்ட பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்ததாகவும் ஜடேஜா கூறியுள்ளார். அதே சமயம் தம்முடைய முடிவில் விடாப்பிடியாக நின்றதே கில் இத்தொடரில் வெற்றிகரமாக செயல்பட்டதற்கான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி ஜடேஜா பேசியது பின்வருமாறு. “இத்தொடர் முழுவதும் அவர் சீராக தற்காப்பாக இருந்துள்ளார். முதல் போட்டியில் அவர் எடுத்த அணியே அதற்கான சமிக்கையாகும். அந்தப் போட்டியில் சிறிய இடைவெளியில் தோற்றதால் அவர் அடுத்தப் போட்டியில் மாற்றம் செய்தார். அவருடைய அணுகுமுறை ஆக்ரோஷமானது கிடையாது, தற்காப்பானது”

- Advertisement -

கில்லின் தற்காப்பு கேப்டன்ஷிப்:

“அனைத்துப் போட்டிகளிலும் அவர் தேர்ந்தெடுத்த பிளேயிங் லெவனின் முதன்மை இலக்கு போட்டியை சமன் செய்வதாகும். வெற்றி என்பது 2வது எண்ணமாக இருந்தது. கடைசி போட்டியின் கடைசி நாளில் அவர் நிறைய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. குறிப்பாக கடைசி நிமிடங்களில் எதிரணி சிங்கிள் எடுப்பதை தடுக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால் அப்போதும் பௌண்டரி எல்லையிலேயே ஃபீல்டர்களை நிறுத்திய அவர் தன்னுடைய திட்டத்தை மாற்றவில்லை”

இதையும் படிங்க: பும்ரா இல்லன்னா இந்தியா ஜெய்ப்பதாக பேசுறவங்களுக்கு இது தெரியாது.. விமர்சனங்களுக்கு சச்சின் பதிலடி

“2 சிங்கிளும் எடுக்கப்பட்டது. அது ஒருவருக்கு பெரிய பலமாக இருக்கும். ஏனெனில் கேப்டன் இப்படி செயல்பட வேண்டும் என்று ஒருவரும், அப்படி செயல்பட வேண்டும் என்று இன்னொருவரும் நினைப்பார்கள். உண்மையில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் அதன் மேலே விடாப்பிடியாக நிற்க வேண்டும். அதற்கான 100% செயல்பாடுகளையும் பங்களிப்பையும் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்

- Advertisement -